ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்._
_சென்னையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்மார்ட் அட்டை வடிவிலான ரேஷன் கார்டுக்கு ஆதார் எண் அவசியம் என்பதால், பொதுமக்கள், தாங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கண்டிப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதுவரை 5.65 கோடி பேர் குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று கூறிய அவர், 5 லட்சத்து 41 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்._