தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆசி பெற முயற்சித்து வருகிறார். இதற்காக அனுமதி கோரி முறையாக கர்நாடக சிறைத் துறையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறைத்துறை இன்னும் அனுமதி அளிக்காததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை சந்திக்க வராமல் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. நேற்று காலை செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜ், வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதி என எவரையும் சிறைத்துறை அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக ஆளும் பழனிசாமி அரசு கர்நாடக அரசின் மீது கடும் கோபம் கொண்டுள்ளது. சசிகலாவை தமிழக சிறைக்கு கொண்டு வருவதற்கென வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.