கூவத்தூர் கூத்துகள்: வெளியான புதிய தகவல்கள்

காஞ்சிபுரத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்டில் தங்கியிருந்த 10 நாள்களில் அவர்கள் ரிசார்டையே அல்லோகலப்படுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியபின்னர், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை கூவத்தூர் ரிசார்டில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சசி முதல்வராக பதவியேற்க இருந்தபோது அவர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்தார் என்று மெரினா கடற்கரையில் ஓ.பன்னீர் செல்வம் மௌன போராட்டத்தை நடத்தினார்.

இதனால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தாம் பதவியேற்பதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தின் பேரில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை காஞ்சிபுரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைக்க சசி தரப்பு ஏற்பாடு செய்தது.

*♌சசிக்கு பேரிடி*

கூவத்தூர் ரிசார்டுக்கு அழைத்து செல்லப்படும் போது சில எம்எல்ஏ-க்கள் தப்பி ஓபிஎஸ் அணிக்கு தாவினர். இதனால் சில நாள்கள் சசிகலாவும் அந்த ரிசார்டில் தங்கியிருந்தார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தம்மை பதவியேற்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு பேரிடியாக அமைந்தது சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு.

  

*எம்எல்ஏ-க்கள் செயல்பாடு*

இந்த நிலைக்கு சசிகலா சிறை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை 122 எம்எல்ஏ-க்களும் 10 நாள்களாக அந்த ரிசார்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது ரிசார்டில் நடந்து என்ன, எம்எல்ஏ-க்கள் நடந்து கொண்ட விதம், எத்தனை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர் உள்பட சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

  

*ஒரு நாள் வாடகை*

அந்த ரிசார்ட்டில் இருந்த அனைத்து 56 அறைகளும் அதிமுக சார்பில் ஒரு டிராவல் ஏஜென்ட்டால் முன்பதிவு செய்யப்பட்டது. ஒரு அறையின் வாடகை நாளொன்றுக்கு ரூ.2,800 ஆகும். அதுமட்டுமல்லாது உணவு, மதுபானம் ஆகியவற்றுக்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சசிகலா தரப்பைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்களும் ரிசார்டில் தங்கியிருந்தனர்.

  

*?சமையலுக்கு ஆள்*

இந்நிலையில் பெண எம்எல்ஏ-க்களின் கணவர்கள், குழந்தைகள் என மிகப் பெரிய கும்பலே அங்கு தங்கவைக்கப்பட்டதால் உணவுக்காக அவரவரது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் ரிசார்ட் நிர்வாகம் விழி பிதுங்கியது.

இதனால் சசி தரப்பினரால் அழைத்து வரப்பட்ட சமையல் செய்யும் குழுவினர் அவர்களது உணவு பிரச்னையை தீர்த்தனர்.

*மசாஜ் இல்லை*

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ-க்களுக்கு அழகிய பெண்களால் மசாஜ் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய். எம்எல்ஏ-க்களுக்கென்று சிறப்பு வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. முதல் 3 நாள்களுக்கு ரிசார்டில் உள்ள அனைத்து காமிராக்களும் முடக்கப்பட்டன. அவர்களது செல்போன்களும் பறித்து வைக்கப்பட்டன.

  

*சசிகலா மட்டுமே தங்கினார்*

ரிசார்டில் இருந்த 56 அறைகளும் புக் செய்யப்பட்டிருந்ததால் அங்கு திடீரென வந்திருந்த சசிகலா உறங்குவதற்கு அறை இல்லாமல் போனது. இதையடுத்து சில எம்எல்ஏக்கள் அங்கிருந்து காலி செய்யப்பட்டு வேறொரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சசிகலா அங்கு தங்கினார். அப்போது அவர் அனைவருடனும் இயல்பாக பழகினார். தினமும் அரைமணி நேரம் நடைப்பயற்சி மேற்கொண்டார்.

  

*ரகசிய கூட்டம்*

தமிழக அரசியல் நிலவரம் குறித்து 10 நாள்களும் எம்எல்ஏ-க்களுடன் அதிமுக மூத்த அமைச்சர்கள் மணிக்கணக்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அச்சமயம் ரிசார்ட் நிர்வாகத்தைச் சேர்ந்த யாருக்கும் அறைக்கு செல்ல அனுமதியில்லை.

  

*ரூ.50 லட்சம் புஸ்*

இந்நிலையில் பிப்.8-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடைபெற இருந்ததால் எம்எல்ஏ-க்கள் தங்கள் ரிசார்டை காலி செய்ய நேரிட்டது. அப்போது சேவைக் கட்டணம், அறை கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ. 70 லட்சம் ஆனது. ஆனால் ரூ.20 லட்சம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மீதி ரூ.50 லட்சத்தை கட்சி விரைவில் செலுத்தும் என்றும் இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது என்றும் ரிசார்டு உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

  

*எம்எல்ஏக்கள் செயல்பாடு*

ரிசார்டில் இருந்த டேபிள்கள் உள்ளிட்ட பொருள்களை எம்எல்ஏ-க்கள் உடைத்தனர். மேலும் உணவு பொருள்களை புல்வெளிகளில் சிந்தியிருந்தனர். ரிசார்ட்டில் உள்ள சொத்துகளை சேதப்படுத்தினர். அவர்கள் காலி செய்தவுடன் ரிசார்டை பராமரிக்கவே இரு நாள்களுக்கு ரிசார்ட் மூடப்பட்டது. அந்தளவுக்கு மோசமாக்கி விட்டனர்.

  

*பிரபலமடைந்த ரிசார்டு*

பணக்காரர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரிசார்ட் இன்று தமிழகம் கடந்து பட்டித் தொட்டிகளெல்லாம் பரவியது ரிசார்ட் உரிமையாளருக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அங்கிருந்தபோது எம்எல்ஏ-க்கள் செய்த அட்டகாசத்தை மறக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டனர்.