பெங்களூரில் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடந்த தகராறில், மாணவர் ஒரு குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் யேலகன்கா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று இவரது பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. ஆண்டு விழா நடந்த முடிந்த சில மணி நேரங்களிலே ஹர்ஷா பள்ளிக்கு வெளியில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட அருகில் இருந்த மக்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் ஹர்ஷா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மக்கள் கூறுகையில், சுமார் 10-12 மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள், திடீரென அந்த இடம் அமைதியானது.
அதன்பின்னர், அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் வேகமாக ஓட்டமெடுக்க, ஒரு மாணவன் மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தான் என்றும் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், விசாரணை மேற்கொண்டதில், ஹர்ஷாவுக்கும் மற்றொரு பள்ளி மாணவர்களுக்கும் இடையே கல்லூரி மாணவியை காதலிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடைப்பெற்ற வாக்குவாதத்தின் போது யாரோ ஒரு மாணவன் ஹர்ஷாவை கத்தியால் குத்தியுள்ளான் என்று கூறியுள்ளனர்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாகவும் விசாரணை