கட்டுரைகள் ஈராக் பதற்றம்: புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்!

ஈராக் பதற்றம்: புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்!

எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

-

- Advertisment -

சினிமா:

தனுஷ், சாரா அலிகான் புகைப்படம் இணையத்தில் வெளியானது! அதிர்ச்சியில் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். சென்னை: தனுஷ் படத்தின் ஹீரோயின் லுக் இணையதளத்தில் லீக் ஆனதால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.   ...

கிருஷ்ணா, சுனைனா திருமணம்?

அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. சுனைனாவும் கிருஷ்ணாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொல்லப் போவதாக...

மணிரத்னம் சொன்ன கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதே சிறப்பு! அமலப்பால்!

முன்பு பலர் நடிக்கப் போகிறார்கள் என பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி,...

லாஸ்யாவின் ஆபாச வீடியோ! இணையத்தில் வைரல் ஆனதா?

தற்போது தமிழில் இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள்...
-Advertisement-

ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!

ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.

ஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…!’

அனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

பங்களாதேஷி முஸ்லிம் கொடுத்த படிப்பினை..! பெண்ணை பறி கொடுத்தவனுக்கு தான் வலி தெரியும்!

ஒன்றரை வருடத்தில் இரு முறை அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும், அதில் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பூர்ணா தேவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளான். இஸ்லாமிய முறைப்படி அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளான்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 19வது நாளாக...

நல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்!

தங்களுக்கு நல்லது செய்ய வந்த நல்வாழ்வுத்துறைப் பணியாளர்கள் மீது கற்களை வீசியெறிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடம் பிடித்தவர்களுக்காக… அஜித் தோவலை அனுப்பிய அமித் ஷா! உறங்கும் உளவுத்துறை!

அடுத்த இரு தினங்களில் அரசின் உத்தரவை மீறியதற்காக, தப்லிக் இ ஜமாத் தலைவர் மௌலானா சாத் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதன் பின்னர் மௌலானா சாத் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர்.

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் டாக்டர்கள் மீது தாக்குதல்! கண்டித்த அமைச்சர்கள்!

தெலங்காணா மாநிலம் இதனை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிப்போம் என்று எச்சரித்துள்ளது.

டாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்!

புதிதாக கோவிட் 19 நோயில் சிக்கியவர்கள் நிறைய பேர் டெல்லியில் நடந்த ஜமாத்து சபையில் பங்குகொண்ட இஸ்லாமியர்கள் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தவிர, நாடு முழுவதும் அனைத்து முதல்வர்களும் இதில் பங்கேற்றனர்.

உத்தரவை மதிக்காததே காரணம் …என்ன நடந்தது தப்லீக் மர்கசில்?

கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணமானதாகக் கூறப்படும், தப்ளீக் இ ஜமாத்தினர் தில்லி அரசின் கட்டுப்பாட்டையும் உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டது உறுதியாகி உள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல…: ஏ.ஆர்.ரகுமான் ‘அட்வைஸ்’!

மத வழிபாடு என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல, வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதற்கான நேரம் இது என்று இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அறிவுரையுடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகம் முழுதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு!

தமிழகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

சேர்ல உட்கார வெச்சி… முதல்முறையா ரொம்ப கௌரவமா… ரூ.1000 கொடுக்குறாங்க… ரேஷன் கடையில!

இந்த சேர்களில் வந்தவர்கள் அனைவரையும் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.
- Advertisement -
- Advertisement -

சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளன.   பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.78.39-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.72.28-க்கும் விற்கப்படுகின்றன. கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் ஒரு நாள் கூட குறையாமல், தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

2019-ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலைகள் இரண்டாவது பாதியில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த கிறித்துமஸ் நாளில் தொடங்கி இன்று வரையிலும்  சரியாமல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த திசம்பர் 25-ஆம் தேதி 77.58 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் லிட்டருக்கு 81 காசுகள் அதிகரித்து ரூ.78.39 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை இதே காலத்தில் லிட்டருக்கு ரூ.1.46 உயர்ந்து இப்போது ரூ.72.28 ஆக உள்ளது.

2019-ஆம் ஆண்டில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தான் பெட்ரோல், டீசல் விலைகள் மிகவும் குறைவாக இருந்தன. அப்போது ரூ.74.51 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று வரை ரூ.3.88   உயர்ந்துள்ளது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை கடந்த 3 மாதங்களில் ரூ.3.44 உயர்ந்துள்ளது. இன்றைய பெட்ரோல் விலை கடந்த 2018-ஆம் ஆண்டு  நவம்பர் மாத கடைசி வார நிலவரத்திற்கு பிந்தைய 15 மாதங்களில் மிக அதிக விலையாகும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்துறைகளும், விவசாயமும் மிக மோசமான பின்னடைவுகளை சந்திப்பது உறுதி!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையான உயர்வை சந்தித்தன. அதன்பின் விலை குறையாத நிலையிலேயே அடுத்த சுற்று விலையேற்றம் தொடங்கியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் மீது அமெரிக்கப் படைகள் நேற்று வானூர்தித் தாக்குதல் நடத்தின. பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் போர்ப்படைத் தலைவர்  காசிம் சுலைமாணி உள்ளிட்ட 7 ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மீண்டும் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, வளைகுடா நாடுகளில்  பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும்  என்ற அச்சம் காரணமாகவே, பன்னாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இதேநிலை நீடித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் பெட்ரோல், டீசல் விலைகள் உச்சக்கட்டத்தை எட்டின. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.33-க்கும், டீசல்  ஒரு லிட்டர் ரூ.79.79&க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஈரானில் பதற்றம் தணிக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் பழைய உச்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொடக்கூடும்.

உலக அளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தால், எரிபொருட்களின் தேவைகள் குறைந்து அவற்றின் விலைகளும் குறைய வேண்டும் என்பது தான் எழுதப்படாத விதி ஆகும். ஆனால், இந்தியாவில் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்ந்து வருவது  மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது. இது குறித்து ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.19.98 வீதமும், டீசலுக்கு ரூ.15.83 வீதமும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மீதான கலால் வரி 2017 அக்டோபரில் லிட்டருக்கு 2 ரூபாயும், 2018 அக்டோபரில் லிட்டருக்கு 1.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நன்மை பயக்காது.

எனவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்குள் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

  • மருத்துவர் ராமதாஸ் (நிறுவுனர், பாமக.,)
- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,968FansLike
235FollowersFollow
800FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

வீட்டிலே செய்யலாம் பிஸ்கெட்:

அரைமணி நேரம் மூடி வைத்து பேக் செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.

முக்கிய நலனைத் தரும் முருங்கைப்பூ கூட்டு!

பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக வேக வைக்கவும். அதில் நெய்யில் வதக்கிய பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து வேகவிட்டு, வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

இன்னிக்கு என்னா பண்லாம்? யோசிக்காம பண்ணுங்க சென்னா மசாலா!

வடித்து சூடாக இருக்கும்போதே அரைத்த பொடியை தூவவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |