ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் பொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா!

பொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா!

வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, 'காமதேனு' என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது.

-

- Advertisment -

சினிமா:

பொன்னியின் செல்வன் பாகம் 1,2 க்கு இடையில் சிம்புவுடன் படமா?

சிறிது இடைவெளிவிட்டு இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ள மணிரத்னம், அந்த இடைவெளியில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்!

ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்!

இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

அவரோட மட்டும் நடிக்க வில்லை! வருந்திய பழங்கால நடிகை! அவர் யார்?

ரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,
-Advertisement-

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மண விலக்கும்… மன விலக்கும்!

கடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.

உஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்!

வேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…

இடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா?

பட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா?

பிப்.14 இன்று காதலர் தினம்! 19ஆம் நூற்றாண்டு பழக்கம்!

19வது நூற்றாண்டில் இருந்து வாலென்டைன் டே என்னும் காதலர் தினம் உலக அளவில் பிபரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது.

பாஜக., ஒரு தேங்காய் மூடி கட்சி: காசு பேறாது… உண்மையைப் போட்டுடைத்த ராதாரவி!

ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க… போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி…

பிஇ படிக்க இனி வேண்டாம் வேதியியல்.. !

கல்வியாண்டு முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

வேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா? இதோ பரிகாரம்!

வேலை இல்லை; திருமணமே நடைபெறவில்லை! குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம்! அடேங்கப்பா முரத் அலி! ஆனாலும் சிக்கிட்டானே..!

திடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

அடப்பாவமே! சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்!

சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொது தேர்வுக்கான விதிமுறைகள்! தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!

வினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

திருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்!

திருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இன்று சர்வதேச வானொலி தினம்! வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை!

இன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
- Advertisement -
- Advertisement -

ஆதிகாலத்தில், தனக்கு பயன்படும் ஒவ்வொன்றையும் மதித்து வணங்கியது மனித இனம். கால்நடைகளை வைத்து பயிர் விளைவித்து உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொண்ட போது, அதற்கு உதவிய அனைத்தையும் வணங்கினான் மனிதன். அந்த வகையில், பசுவின் தேவை மனிதனுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. எனவே, பசுவை தாயாகவும் தெய்வமாகவும் வழிபட்டான்.

வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, ‘காமதேனு’ என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது. வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, ‘காமதேனு’ என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது. வேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, ‘காமதேனு’ என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது.

‘கவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவநாநி சதுர்தச’ என்பது புராண வாக்கு. அதாவது, பசுவின் அங்கங்களில் ஈரேழு பதினான்கு உலகங்களும் அடங்கியிருக்கின்றனவாம்!

கோயிலில், அதிகாலை வேளையில் கோ- பூஜையுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். பெருமானின் கருவறை வாசல் கதவுகள் திறக்கும் முன், கோயில் காராம் பசுவை அலங்கரித்து, பூக்களால் அர்ச்சித்து, கற்பூர ஆரத்தி காட்டி, குங்குமம் கொடுத்து, மங்கல திரவியங் களை வைத்து, திரையை அகற்றி பிறகு தீபாராதனை நடைபெறும். திருவரங்கம் முதலான முக்கியத் தலங்களில் இந்த தரிசனத்தை தினமும் காணலாம்!

மனிதனுக்கு பயன்படாது என்று கழிக்கப்பட்ட பொருட்களான வைக்கோல், புல், கழுநீர், புண்ணாக்கு, தவிடு, தானியங்களின் தோல் போன்றவற்றை உணவாக ஏற்று, நமக்கு உணவாகும் பாலைத் தருவது பசுவின் தெய்விகம். இறைவனும் அப்படிப்பட்டவன்தானே!

குழந்தை செய்யும் குறும்புகளையும் தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, குழந்தைக்கு நல்லதையே செய்யும் தாயின் நிலையைப் போன்றும், பக்தன் மீது பரிவு கொண்டு அருள் புரியும் தெய்வத்தின் நிலையைப் போன்றும் திகழ்வதாலேயே பசு, தெய்வத் தாய். இதனால்தான் கோ-பூஜை பழங்காலத்திலேயே பிரசித்தி பெற்றது!

இல்லங்களில் மட்டுமல்லாது, கோயில்களில் கோசாலை அமைத்து பசுக்களை வளர்க்கின்றனர். பழங்காலத்தில், தானங்களில் கோ-தானம் சிறப்பான இடத்தை வகித்துள்ளது. இப்போதும்கூட சிலர், கோயில்களுக்கு கோ-தானம் செய்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள்.

தெய்வமாகத் திகழும் பசுவை வழிபடுவதற்கு ஒரு நாளையும் ஒதுக்கினர். அது, தை மாதம் 2-ஆம் நாள். இந்த நாளில் பசுவைக் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜை செய்து வழிபடவேண்டும்.

பூஜிப்பது எப்படி?

சிலர் மந்திர பூர்வமாகச் செய்வார்கள். இருப்பினும், எல்லோருக்கும் பொதுவான வழிபாட்டு முறையும் உண்டு. மேலும், கோபூஜையுடன் இந்திர பூஜையும் செய்யும் வழக்கமும் உள்ளது.

இல்லத்தில், விசாலமான இடத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும். அதிகாலையில், பசுவையும் கன்றையும் குளிப்பாட்டி, மஞ்சள்- குங்குமம்- சந்தனம் இட்டு அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும்.

மற்றோர் இடத்தில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை வைத்துக் கொண்டு, நுனி இலை அல்லது தாம்பாளத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜிக்க வேண்டும்.

இன்னொரு நுனி இலையில் சர்க்கரைப் பொங்கல், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து, இந்திரனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகே பசுவுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பொங்கல், அகத்திக்கீரை அளிப்பது சிறப்பு. பிறகு தாம்பூலம் கொடுத்து, தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். பூஜையின் நிறைவில், கோ-மாதாவிடம் இப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ரட்சமாம் ரட்சமே கேஹம் ரட்சமே புத்ர பௌத்ரகான்
ரட்ச கோஷ்டம் ரட்ச பசூன் குருதேனூ: பயஸ்விநீ:
அனயா பூஜயா இந்த்ர: ப்ரீயதாம் காமதேனுப்ரீயதாம்||

என்று பிரார்த்தித்து, நமது வேண்டுதலைச் சொல்லி, பசுவை வலம் வந்து வணங்க, மங்கல வாழ்வு ஸித்திக்கும்; வீடு ஸ்பிட்சமாகும்.

பசுவுக்குப் புல் கொடுத்தால், பஞ்ச மகா பாவங்களும் விலகும் என்றனர் முனிவர்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்தோ, தோஷமுள்ளவராகவோ இருந்தால், பசுவின் சாபம் இருக்கக் கூடும். அவர்கள், இந்தப் பாவங்கள் விலக, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, பசுவுக்கு புல் கொடுத்துவர, தோஷங்கள் விலகும்; குலம் தழைக்கும்!

ஸெளரபேப்ய: ஸர்வஹிதா: பவித்ரா: புண்யராசய:|
ப்ரதிக்ருண்ணம் த்விமம் க்ராஸம் காவஸ் த்ரைலோக்ய மாதர:||

‘காமதேனு வம்சத்தைச் சேர்ந்தவையும், எல்லோருக்கும் நன்மை செய்பவையும், பரிசுத்தமானவையும், புண்ணியக் கூட்டங்களுமான… மூவுலகத்துக்கும் தாயான பசுக்கள், இந்தப் புல்லைப் பெற்றுக்கொண்டு அருள் புரியட்டும்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,969FansLike
207FollowersFollow
761FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்!

அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.

ஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி!

இதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.

சுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்!

நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |