spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇனி வந்தேமாதரம்... பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..!

இனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..!

- Advertisement -
rajpath r day rehearsal

இந்த ஆண்டு ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கு பல நிகழ்வுகள் வழக்கம் போல் இருக்கும். இந்த நிகழ்விற்காக செய்யப்பட்ட மாற்றங்களில், பிரிட்டிஷ் காலத்திலிருந்து இசைக்கப்பட்ட ஓர் இசைக்கு பதிலாக ஒரு தேசிய பாடலான வந்தேமாதரம் ட்யூன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதி ராஜ்பாத்தில் ‘சங்கநாதம்’ கேட்கப்படும். இந்திய ஆயுதப் படைகளுக்காக உருவாக்கப்பட்ட தற்காப்பு இசைக்குழுவான சங்க்நாத் முதல் முறையாக இசைக்கப்படும். இந்திய கிளாசிக்கல் பாரம்பரிய இசையை அடிப்படையாகக் கொண்ட பிரத்யேக முதல் அசல் இசை இது! இந்த இசைப்பாடல், மூன்று கிளாசிக்கல் ராகங்களின் கலவை – பிலாஸ்கானி தோடி ராகம், பைரவி மற்றும் கீர்வாணி ராகங்களின் கலவை.

இந்தப் பாடலை நாக்பூரைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் தனுஜா நபாடே இசையமைத்து அளித்தார், பிரிகேடியர் விவேக் சோஹல் எழுதிய கவிதையை அடிப்படையாகக் கொண்டது இது. இந்த முறை, மகார் ரெஜிமென்ட், இது நாள் வரை இசைக்கப் பட்ட பிரிட்டிஷ் இசைக்குழுவை அகற்றி இந்திய பாரம்பரிய இசையை கொண்டுவருவதற்கான முடிவை எடுத்தது.

இந்த இசைக்கு 2017 டிசம்பரில் அதிகாரபூர்வ மார்ஷியல் இசைக்குழுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஜனவரி 15, 2019 அன்று நடைபெற்ற இராணுவ தின அணிவகுப்பின் போது முதல் முறையாக 14 இராணுவக் குழுக்களால் ஒன்றாக இசைக்கப்பட்டது.

மார்ஷியல் டியூன் இராணுவத்தால் இயற்றப்பட்டாலும், முதல்முறையாக ஆயுதப் படைகளுக்கு வெளியில் இருந்து ஒரு நபர் இதற்கு இசையமைக்க உதவினார்.

டாக்டர் நஃபாடே இதுகுறித்துக் கூறிய போது, இந்த இசையமைப்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், குடியரசு தினத்தன்று ராஜ்பாத்தில் அவர் இசையமைத்த இசையைக் கேட்பதற்குக் காத்திருக்க முடியாது என்றும் ஆர்வம் பொங்கக் கூறினார்.

இதனிடையே, இந்திய ராணுவ மியூசிக் பேன்ட் இத்தனை வருஷம் வாசிச்சிட்டிருந்த ஒரு பாடலை நீக்கிட்டாங்க என்று, கம்யூனிஸ்ட் சார்பு நபர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் புலம்பல்களை தெரிவித்து வந்தனர்.

இதனை விமர்சித்து சிலர் கருத்துப் பதிவுகளையும் செய்து வருகின்றனர். அதில் ஒன்று…

இத்தனை வருஷமா கேவலமான ஒரு விசயம் நடந்திட்டிருந்திருக்கு … குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டு, பாசறை திரும்பும் முன் இந்த பாடலை முக்கால் மணிநேரம் வாசிச்சுட்டு தான் ராணுவம் பாசறை திரும்புமாம் …

அந்த பாடல் என்னன்னா பைபிளில் இருக்கும் வசனங்களாம் …பைபிள் வசங்களை ஏன் இந்திய ராணுவத்தில் சேர்ந்தாங்கன்னு நீங்க கேட்குறது தெரியுது … அந்த வசனங்கள் அடங்கிய பாடல் காந்திக்கு பிடிக்குமாம் … அதனால் ராணுவத்தில் சேர்த்துட்டாங்களாம் …

அந்த பாடு நாட்டை அவன் அப்பன் வீட்டு சொத்து மாதிரி பிரிக்க விட்டதே பித்தலாட்டம் … பத்தாததுக்கு கஜானா பணத்துல பாகிஸ்தானுக்கு பங்கு கேட்டு உண்ணாவிரதம் இருந்தான் …

“ரகுபதி ராகவ ராஜாராம்” அழகான பக்தி பாடலில் அல்லாவை ஈஸ்வரனுக்குனு இணை வெச்சான் … ராணுவத்துல கூட இவனுக்கு புடிச்சதுங்குறதால பைபிள் … !

சரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … ? இனி “வந்தே மாதரம்” பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … !

  • Rejeesh Kumar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe