11/07/2020 1:36 AM
29 C
Chennai

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.
13 July31 TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு... முறைகேடு நடந்தது எப்படி?

TNPSC Group IV தேர்வு முறைகேடு சிறிது நேரத்தில் மறையும் சிறப்பு மை! அதிர வைக்கும் குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி?

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய 9,398 பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாகி 24,260 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகியுள்ளதாக செய்தி வெளியானது

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட டிஎன்பிஎஸ்சி 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்துள்ளதுஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள், இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்துள்ளனர்

அதன்பின் இடைத்தரகர்களிடம் இருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவை பயன்படுத்தி, இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் தேர்வர்கள் விடைத்தாளில் குறித்துள்ளனர்.

இதன்பின் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன், 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளனர்.

இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்ப்டடுள்ளது

மேற்கூறிய மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்று டிஎன்பிஎஸ்சி உறுதி செய்துள்ளது.

இதன்காரணமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

1. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2 தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களைத் தேர்வு செய்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதி

3. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு

4. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.

இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு... முறைகேடு நடந்தது எப்படி?

பின் தொடர்க

17,865FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.