10/07/2020 11:37 PM
29 C
Chennai

மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.
IMG 20200124 WA0085 மோடியின் பியூட்டி டிப்ஸ்... அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

ரகசியத்தை வெளியிட்ட பிரதமர் மோடி. முகம் பிரகாசமாக பொலிவோடு விளங்குவதற்கு காரணம் இதுவே என்று அந்த ரகசியத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.!

நீண்ட நாட்களுக்கு முன் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். “மோடிஜி! உங்கள் முகம் எவ்வாறு எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? என்று கேட்டார். அவருக்கு நான் இவ்வாறு பதில் அளித்தேன்.

“நான் மிகவும் கடினமாக உழைக்க கூடியவன். அதனால் நெற்றியில் வியர்வை பெருகும். அப்பொழுது முகத்தை வியர்வையால் மசாஜ் செய்து கொள்வேன். அதனால்தான் என் முகம் ஒளியோடு விளங்குகிறது என்று கூறினேன் என்றார்.

IMG 20200124 WA0084 மோடியின் பியூட்டி டிப்ஸ்... அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த சாகச பாலர் விருது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது பால புரஸ்கார் விருது பெற்ற சாகச சிறுவர்களுக்கு பிரதமர் பல அறிவுரைகளையும் ஐடியாக்களையும் அளித்தார்.

” ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்” என்றார்.

“வாழ்க்கையில் எத்தனை விருதுகள் பெற்றாலும் கஷ்டப்பட்டு உழைப்பதை நிறுத்த கூடாது. இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சிலர் தம் திறமைக்கு ஏற்ப பரிசும் மதிப்பும் கிடைத்தவுடன் கர்வம் கொள்வார்கள். மேற்கொண்டு வேலை செய்வதை நிறுத்தி விடுவார்கள். வேறு சிலர் எத்தனை அவார்டு வந்தாலும் அவற்றை ஊக்கமூட்டும் விதமாக ஏற்று மேலும் உற்சாகமாக உழைத்து முன்னேறுவார்கள். அவார்ட் கிடைத்ததும் இனி சாதிப்பதற்கு எதுவுமில்லை என்று எண்ணக்கூடாது. பரிசுகள் வாழ்க்கைக்கு ஆரம்பப் படிகள் என்று எண்ண வேண்டும்” என்று சிறுவர்களிடம் பிரதமர் எடுத்துரைத்தார்.

IMG 20200124 WA0081 மோடியின் பியூட்டி டிப்ஸ்... அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

இது குறித்து இங்கு நான் ஒரு சட்டத்தை இயற்றி விட்டதாக எண்ணுகிறேன் என்று பிரதமர் ஜோக் அடித்தார்.

இத்தனை சிறிய வயதில் நீங்கள் வயதுக்கு மீறிய திறமையையும் சாகசத்தையும் காட்டி உள்ளீர்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் மிகப் பல அரிய செயல்கள் செய்வதற்கு இது ஊக்கமளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களிடமிருந்து நானும் ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன் என்றார் பிரதமர் மோடி.

49 சிறுவர்கள் இந்த நிகழ்ச்சியில் பால புரஸ்கார் விருது பெற்றார்கள்.

IMG 20200124 WA0082 மோடியின் பியூட்டி டிப்ஸ்... அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

இவர்கள் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேஷ், மணிப்பூர் மற்றும் பல மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள். கலை, கலாச்சாரம், சமூக சேவை, விளையாட்டு, கல்வி போன்ற பல பிரிவுகளில் இவர்களுக்கு பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

அவர்களுள் உலகெங்கும் 50க்கு மேல் மேஜிக் ஷோ நடத்திய 12 வயது தர்ஷ் மலானி, தபலா வாசிப்பில் திறமை பெற்ற 11 வயது மனோஜ்குமார் லோஹர் உள்ளனர்.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad மோடியின் பியூட்டி டிப்ஸ்... அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.