― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஹிந்து ஓட்டு குறித்து திமுக.,வை தோலுரித்த ராஜேந்திர பாலாஜி! பயத்தில் பாயும் ஸ்டாலின்!

ஹிந்து ஓட்டு குறித்து திமுக.,வை தோலுரித்த ராஜேந்திர பாலாஜி! பயத்தில் பாயும் ஸ்டாலின்!

- Advertisement -

ஹிந்துக்கள் ஓட்டு இனிக்கிறது; உயிர் கசக்கிறது என்று திமுக., மீது ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டுகளை வலுவாக வைத்து தோலுரித்துக் காட்டியதால் கடுப்பான திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் மீது பாய்ந்திருக்கிறார்.

”திமுக.,விற்கு ஹிந்துக்களின் ஓட்டு இனிக்கிறது; அவர்களின் உயிர் கசக்கிறது. இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். அவர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்…

அதிமுக., என்பது மிகப்பெரிய ஆலமரம். பல ஊர் பறவைகள் வரும். இளைப்பாறும், பழத்தை கொத்தி சாப்பிடும்; பின் செல்லும்; மீண்டும் வரும். நாங்களும் குட்ட குட்ட குனிய மாட்டோம். கூட்டணியை அரவணைத்து செல்வோம்.

விஜயகாந்தும், பிரேமலதாவும் திமுக.,வை கடுமையாக எதிர்க்கக் கூடியவர்கள். கட்சித் தொண்டர்கள், அதிக ‘சீட்’ கேட்பர். அவர்களை திருப்திபடுத்த வேண்டிய கட்டாயம், தலைமைக்கு உண்டு. எனவே உள்ளாட்சியில் வெற்றி பெற்றவர்கள் மத்தியில் பிரேமலதா கூட்டணி குறித்து பேசியது நியாயம் தான்.

சிவகாசி சிறுமி கொலை விவகாரத்தில் கைதானவரே குற்றவாளி என ஒப்புக்கொண்டு கொலை செய்த இடத்தை காண்பித்து எப்படி கொலை செய்தேன் என வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நபர் கொலை செய்துள்ளார். இதற்கு, ஸ்டாலின் எந்த கருத்தும் கூறவில்லை.

மற்ற மதத்தினருக்கு சிறிய காயம் ஏற்பட்டால் குரல் கொடுப்பவர், பாதிக்கப்பட்ட சிறுமி ஹிந்து என்பதால் கண்டு கொள்ளவில்லை.

அதேபோல சப் – இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில், கொலையாளிகள் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அனுதாபம் தெரிவிக்கவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் எந்த மதம் என்று பார்ப்பதில்லை.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், ஹிந்து, கிறிஸ்தவர்களாக இருந்து, தவறு செய்தது முஸ்லிமாக இருந்தால், தி.மு.க., கண்டிப்பதில்லை.

நல்ல முஸ்லிம் மக்களுக்காக போராடினால் வரவேற்கலாம். தவறு செய்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரும் கட்சியாக தி.மு.க., உள்ளது.

திருச்சியில், பாஜக., பிரமுகரை கொலை செய்த சம்பவம் குறித்து திமுக., கண்டனம் தெரிவிக்கவில்லை. தி.மு.க.,விற்கு ஹிந்துக்கள் ஓட்டு இனிக்கிறது; அவர்களின் உயிர் கசக்கிறது. இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால், ஹிந்து கடவுள்களை விமர்சிக்கும் திமுக.,வை தேர்தலில் அடியோடு விரட்டி அடிக்க முடியும். ஆனால் ஹிந்துக்கள் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதால் திமுக., துாக்கி போட்டு மிதிக்கிறது.

கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை உலக பிரச்னையாக திமுக., மாற்றியது. சிவகாசியில் பள்ளி மாணவி கொலைக்கு ஒரு குரல் கொடுக்கவில்லை.

நேரு பல்கலையில் ஒரு மாணவன் பாதிக்கப்பட்டதும் விமானம் ஏறிச் சென்று ஆறுதல் கூறுகின்றனர். சிவகாசிக்கு வர முடியவில்லை. ஹிந்து மத கடவுள்களை இழிவுபடுத்தும் திமுக.,விற்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.

நான் ஹிந்து வெறியன் அல்ல; அனைத்து மத கடவுள்களையும் வணங்குவேன். ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்த திமுக.,விற்கு எங்கிருந்தோ பணம் வருகிறது… என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ஸ்டாலின் பதில்:

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்…

பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! – என்று கோரியுள்ளார்.

இதன் மூலம், ஸ்டாலின் மீது ராஜேந்திர பாலாஜி வைத்த குற்றச்சாட்டுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆமோதித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version