Home சற்றுமுன் யாரிடமெல்லாம் சென்றது? 92 வது ஆஸ்கர் விருது!

யாரிடமெல்லாம் சென்றது? 92 வது ஆஸ்கர் விருது!

92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இன்று தொடங்கியது. இந்த வருடம் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதினை ‘ஒன்ஸ் அபான் எ டைம்… இன் ஹாலிவுட்’ என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டு பெற்றார்.

சர்வதேச அளவில் திரையுலகின் மிக உயரிய, பெருமைமிகு விருதாக கருதப்படுவது ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களின் வாழ்நாள் லட்சியமே இந்த அகாடமி விருதினைப் பெறுவதாக இருக்கும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது ‘ஒன்ஸ் அபான் எ டைம்… இன் ஹாலிவுட்’ என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பாங் ஜூன் ஹோ- விற்கு “பாரசைட்” என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த தழுவப்பட்ட திரைப்படத்திற்கான விருது தைக்கா வைத்திதிக்கு “ஜோ ஜோ ராபிட்” படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த ஆவணக் குறும்படம்

லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஸோன்

சிறந்த ஆவணப் படம்- அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு-லிட்டில் வுமன்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு-ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த குறும்படம்-தி நெய்பர்ஸ் விண்டோ

சிறந்த தழுவல் திரைக்கதை-ஜோஜோ ராபிட் – டைகா வைடிடி

சிறந்த அசல் திரைக்கதை-பாரசைட் – பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வொன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்-ஹேர் லவ் (Hair Love)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்-டாய் ஸ்டோரி 4 (Toy Story 4)

சிறந்த உறுதுணை நடிகர்-பிராட் பிட் – ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
சிறந்த பாடல்-ராக்கெட்மேன் – எல்டன் ஜான், பெர்னீ டாபின்

சிறந்த இசை-ஜோக்கர்

சிறந்த சர்வதேசத் திரைப்படம் / அயல்மொழித் திரைப்படம்-பாராசைட் – தென் கொரியா

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்-பாம்ப்ஷெல்

சிறந்த கிராஃபிக்ஸ்-1917

சிறந்த படத்தொகுப்பு-ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி – மைக்கெல் மஸ்கர், ஆண்ட்ரூ பக்லேண்ட்

சிறந்த ஒளிப்பதிவு-1917 – ராஜர் டீகின்ஸ்

சிறந்த ஒலிக் கலவை-1917 – மார்க் டெய்லர், ஸ்டூவர்ட் வில்சன்

சிறந்த ஒலித் தொகுப்பு-ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி – டொனால்ட் சில்வெஸ்டர்

சிறந்த உறுதுணை நடிகை-லாரா டெர்ன் – மேரேஜ் ஸ்டோரி

சிறந்த பின்னணி இசைக்கான விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம் பெற்றுள்ளது 1917 திரைப்படம் 3 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு,சிறந்த ஒலிக் கலவை மற்றும் சிறந்த கிராஃபிக்ஸ் பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது.

சிறந்த வெளிநாட்டு படம் ,சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது பாராசைட்.

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் பட நாயகன், நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றார்.

ஆஸ்கர் விருதுக்கு 4 ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்ட வாக்கீன் பீனிக்ஸ், முதல்முறையாக விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை ஜூடி படத்தில் நடித்த ரென்னி வென்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version