மதுவிலக்கு சோதனைசாவடியில் வைக்கோல் லாரி கவிழ்ந்தது.

IMG_1940 செங்கோட்டை : தமிழக கேரள எல்லையான புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் சுமார் 2ஆயிரம் லாரிகள் சென்று வருகின்றன. நேற்று அதிகாலை புளியரையிலிருந்து அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி  கேரளா நோக்கி ஆரியங்காவு மதுவிலக்கு சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை மது என்பவர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது லாரி திடீர் என ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மதுவிலக்கு சோதனை சாவடி மீது கவிழ்ந்தது. அப்போது பணியிலிருந்த காவலர் ஜமால் என்பவர் அதிர்ஷ்டவசமாக சுதாரித்து ஓடியதால் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.