கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி!

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொரோனா நோய் நீங்க வேண்டியும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும், ம்ருத்யுஞ்சய சிறப்பு யாகம் நடைபெற்றது.

miruthyunjaya homam tenkasi temple
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொரோனா நோய் நீங்க வேண்டியும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்சய சிறப்பு யாகம் நடைபெற்றது.

“கொரோனா” தாக்கத்தை கட்டுப்படுத்த இந்து திருக் கோயில்களில் சிறப்பு யாகம் – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

“கொரோனா”வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை காப்பாற்ற ஏப்ரல் 1, 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நோய் தீர்த்த முக்கிய கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் சிறப்பு யாகங்கள் நடத்திட உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலக நாடுகளை நடுங்க வைத்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. வேதங்களில், திருமுறைகளில் நோய் தீர்க்கும் பதிகங்களும், மந்திரங்களும் கூறப்பட்டுள்ளன.

கொடிய நோய்களை தீர்த்த பல்வேறு திருக்கோயில்களும் நமது பகுதியில் உள்ளன. இது தொடர்பாக திருக்கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடத்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் வைத்திருந்தது.
இதனடிப்படையில் ஏப்ரல் 1, 2 , 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு யாகங்கள் நடத்திட இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி புதன்கிழமை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில், நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் திருக்கோயில், நிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், காசி விஸ்வநாதர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி திருக்கோயில், திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் திருக்கோயில்களிலும்

ஏப்ரல் – 2 ந் தேதி வியாழக்கிழமை ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாஜலபதி திருக்கோயில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில், பாணபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை சாரபுரீஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி திருக்கோயில், திரு இந்தளூர் பரிமள ரங்கநாத சுவாமி திருக்கோயில்களிலும்,

ஏப்ரல் – 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பகோணம் ஆதிகும் பேஸ்வரர் திருக்கோயில், காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், சோமேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை மயூரநாத சுவாமி திருக்கோயில், படித்துறை விஸ்வநாதர் திருக்கோயில், கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில்களிலும், ஏப்ரல் – 4ஆம் தேதி சனிக்கிழமை திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோயில், அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கதிராமங்கலம் வன துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அண்ணன் கோயில் அண்ணன் பெருமாள் திருக்கோயில் ஆகிய 28 ஆலயங்களில் சிறப்பு யாகங்கள் நடைபெற உள்ளது.

மிருத்யுஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம், ருத்ர ஹோமம், ஸ்கந்த ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாமம்,இடர்களை பதிகம், திருநீலகண்ட பதிகம், கோளறு பதிகம் பாராயணம் செய்யப்பட்டு பஞ்சகவ்ய அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்திட உத்தரவிட்டு தமிழக மக்களை கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்திடும் முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..
இப்படிக்கு…
ஆர். ஸ்ரீராம் (பாஜக., சீர்காழி)

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :