கொரோனாவால் களை இழந்த… பத்ராசலம் ஸ்ரீராமநவமி உத்ஸவம்!

மிகச்சிறந்த வரலாறு கொண்ட மிதிலா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சீதாராம கல்யாணம் இந்தமுறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கப்போகிறது.

badrachalam4

பத்ராசலத்தில் ஸ்ரீராமநவமி உற்சவத்தின் மீது கொரோனா எஃபெக்ட். பல புதிய உத்தரவுகளோடு ஸ்ரீசீதாராமர் கல்யாணம் நடைபெறுகிறது.

ஶ்ரீசீதாராமர் கல்யாணம் நடத்துவதில் கொரோனா எஃபெக்ட் பத்ராசலம் ஶ்ரீராமர் கோவில் மீது கூட விழுந்துள்ளது.

வைபவமாக வியாழனன்று நடத்தவேண்டிய சீதாராம கல்யாணம் பல உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடக்க இருக்கிறது.

badrachalam3

மிகச்சிறந்த வரலாறு கொண்ட மிதிலா வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சீதாராம கல்யாணம் இந்தமுறை ஆலயத்தின் உள்ளேயே நடக்கப்போகிறது.

badrachalam5

பத்ராசலம் என்றாலே பூலோகவைகுண்டம். சாட்சாத் ஸ்ரீராமர் அடிவைத்து நடந்த புண்ணியபூமி. அப்படிப்பட்ட பூலோக வைகுண்டத்தில் சீதாராம கல்யாணத்தை கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பக்தரின் ஆசையாக இருக்கும். மிகப்பெரிய அளவில் பக்தர்கள் வரத் தொடங்கியதால் சீதாராமர் கல்யாணத்தை நடத்துவதற்காக 1964ல் மிதிலா வளாகத்தை அமைத்தார்கள். இங்கு 25 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து கல்யாணத்தை கண்டுகளிக்க முடியும்.

badrachalam1

முதல் முறையாக பத்ராசல ராமர் ஆலயத்தின் வரலாற்றிலேயே என்றுமே காணாதபடி கொரோனா தொற்று வியாதியின் தாக்குதலால் மாநில அரசாங்கம் சீதாராம கல்யாணத்தை மிதிலா வளாகத்தில் இன்றி ராமர் ஆலயத்தின் உள்ளேயே நடத்த தீர்மானித்துள்ளது.

badrachalam2

மிதிலா வளாகத்தில் ஶ்ரீராமரின் கல்யாணம் நடக்காமல் இருப்பது இதுவே முதல்முறை. இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :