தப்ளிக்-இ-ஜமாத் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம்… கொரோனா பரவி… மளிகைக்கடை நடத்திய பெண்மணி மரணம்!

வெளியிடங்களில் பயணக்கவில்லை என்றும், தொற்றுநோயால் பாதிக்கப் பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர் தனது கிராமத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தார்.

telangana hyderabad people in que

ஏப்ரல் 1 ம் தேதி இறந்த, தெலங்காணாவின் ரங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்த நிலையில், அவர் கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்தார் என்று முடிவானது.

ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ​​அந்தப் பெண், வெளியிடங்களில் பயணக்கவில்லை என்றும், தொற்றுநோயால் பாதிக்கப் பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர் தனது கிராமத்தில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வந்தார்.

மாவட்ட ஆட்சியர் அமோய் குமார், சைபராபாத் போலீஸ் கமிஷனருடன் வெள்ளிக்கிழமை நேற்று, அந்தப் பெண்ணின் கிராமத்திற்குச் சென்று சோதனை செய்தனர். காவல் துறையினர் மருத்துவ ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய தலா 30 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் கடந்த இரண்டு நாட்களில் அந்தப் பெண்மணியுடன் தொடர்பில் இருந்திருக்கக் கூடிய அனைவரையும் சென்று சந்தித்து, கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

corono

அந்தப் பெண்மணியின் குடும்ப உறுப்பினர்களுடன் மேலும் 20 பேர் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளனர். இருப்பினும், இறந்த பெண் உள்ளூர் மளிகைக் கடை ஒன்றை நடத்தியதிலிருந்து கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் வீட்டில் ஒரு வாடகை அறையில் வசித்து வந்த நான்கு ஆண்கள், பீகாரைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் செகூரைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரை, தங்களைத் தனிமைப் படுத்தி தற்காத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸில் பயணம் செய்ததாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதம் தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் நடத்திய கூட்டத்தில் இருந்து திரும்பி வந்தவர்களுடன் இவர்கள் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :