படுபயங்கர கொடூரம் : தப்ளிக் இ ஜமாஅத்தால் கொரோனா பரவுவதாகக் கூறிய இளைஞர் சுட்டுக் கொலை!

நாடு முழுதும் கொரோனா பரவக் காரணமே தப்லீக் இ ஜமாத்தான் என்று உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.

tablighi jamaat members corona positive at kanpur

நாடு முழுதும் கொரோனா பரவக் காரணமே தப்லீக் இ ஜமாத்தான் என்று உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு உ.பி. அரசு நிதி உதவி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமே தில்லியில் தப்லீக் இ ஜமாஅத் நடத்திய மாநாடுதான் என்று உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் செய்த இளைஞர் ஒருவர் ‘மர்ம’ நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

தில்லியில் கடந்த மார்ச் மாத மத்தியில் நடைபெற்ற தப்ளிக் இ ஜமாத் என்ற மத அமைப்பு நடத்திய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பதாக மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன.

இருப்பினும், கொரோனா என்பது தொற்று நோய். இதனை மத ரீதியாக பிரசாரம் செய்யக் கூடாது என்று அரசியல் கட்சியினர் சிலரும், மர்ம மனிதர்களும் செய்தி ஊடகங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதை அடுத்து தமிழக ஊடகங்களில் மர்ம மாநாடு, மர்ம நபர்கள் என்று குறிப்பிடத் தொடங்கினர்.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இளைஞர் ஒருவர் தமது பகுதியில் தப்ளிக் இ ஜமாத் மாநாட்டினால்தான் இந்தியாவில் கொரோனா பரவியது என பிரசாரம் செய்தார். அவர் இன்று தமது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த போது, அவரை நோக்கி வந்த மர்ம நபர்கள், மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் துப்பாக்கிக் குண்டுகள் தலையில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மர்ம மனிதர்கள் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

yogi

இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :