மாஸ்க் தைக்கும் மத்திய அமைச்சரின் மனைவியும் மகளும்…

டிஸ்போசபிள் மாஸ்க்குகளை விட துவைத்து காய வைத்து மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் மாஸ்க்குகளே சிறந்தவை என்று மத்திய அரசாங்கம் விடுத்த அறிக்கை வழிகாட்டுகிறது.

mask stiching

டிஸ்போசபிள் மாஸ்க்குகளை விட துவைத்து காய வைத்து மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் மாஸ்க்குகளே சிறந்தவை என்று மத்திய அரசாங்கம் விடுத்த அறிக்கை வழிகாட்டுகிறது.

சென்ற வாரம் பிரதமர் நரேந்திர மோடி கூட மாஸ்க்குகள் உபயோகிக்க வேண்டும் என்றும் அதுகூட வீட்டிலேயே தைத்து உபயோகியுங்கள் என்றும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இவற்றின்படி மத்திய பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மனைவி மிருதுளாவும், மகள் நைமிஷாவும் வீட்டிலேயே தம் குடும்பத்தினருக்கும் பிறருக்காகவும் மாஸ்க்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த கடினமான நாட்களில் நாம் அனைவரும் சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். என் மனைவியும் மகளும் வீட்டில் பொழுதை வீணாகக் கழிக்காமல் தமக்காகவும் பிறருக்காகவும் மாஸ்க்குகள் தைத்து வருவதைப் பார்க்கும்போது பெருமிதமாக உள்ளது.

தைப்பதில் நல்ல சிரத்தையும் பணித்திறனும் பெறுவதற்கு இதைவிட நல்ல நேரம் வேறு என்ன இருக்கும்? என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். தையல் மிஷினின் அருகில் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரும் வெள்ளைத்துணியில் மாஸ்க்குகள் தைக்கின்ற போட்டோவைக் கூட அவர் போஸ்ட் செய்துள்ளார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :