மலையாள இயக்குநரை 2வதாக கரம்பிடித்த நடிகை ஜோதிர்மயி

jothirmayi-marrageதிருவனந்தபுரம்: கேரள நடிகை ஜோதிர்மயி, பிரபல மலையாள இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அமல் நீரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இவருக்கு 2ஆவது திருமணம். கேரளாவைச் சேர்ந்த நடிகை ஜோதிர்மயி தமிழில் தலைநகரம், விஜயகாந்துடன் சபரி, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வரும் முன்பே திருமணமான இவர், கல்லூரியில் படித்த காலத்தில் நிஷாந்த் என்பவரைக் காதலித்து மணந்தாராம். பின்னர் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், மலையாள இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத்தை காதலித்து வந்தார் ஜோதிர்மயி. இருவரும் கொச்சியில் இன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு இரு தரப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனராம்.