
மதுரையில் அரசு உத்தரவை மீறி செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து, பெரிய ஜவுளிக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்!
மதுரையில் கடைகள் திறந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, குளிர்சாதனம் இல்லாமல் ஜவுளிக் கடைகள் திறந்து குறிப்பிட்ட நேரத்துக்கு செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
இதை அடுத்து கடைகள் பல வழக்கம் போலத் திறந்து, ஏ.சி. இல்லாமல் செயல்பட்டன. ஆனால், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பெரிய ஜவுளிக் கடையானது அரசு உத்தரவை மீறி, ஏ.சி.யுடனும், பல மாடிக் கட்டடங்களையும் திறந்து வைத்து, வியாபாரத்தில் ஈடுபட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது.
இதனை அடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சத்தார் தலைமையில் வருவாய்த் துறையினர் அந்த கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். பின்ன்ர் பெறப் பட்ட புகாரின் அடிப்படையில், கடைக்கு சீல் வைத்ததாக தகவல் வெளியானது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை