
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இது, செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதி என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்து, தமிழ்நாடு அரசு செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசின் சிக்கன நடவடிக்கையில் மேலும் சில…
அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது.
மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு.
“அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்”.
நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி.
மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை.
சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி.
மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி.