தற்போது கொரோனா காலத்திலும் கூட, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் போது கூட, கிறிஸ்துவ மிஷனரிகள் தங்கள் மதமாற்ற செயல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதற்கு உள்ளூர் பகுதி மக்களும், இந்து இயக்கங்களும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிப்பதும், பிறகு அவர்கள் திரும்பிச் செல்வதும் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதுமே மதமாற்றங்கள் நடந்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஒரு டிவி விவாத நிகழ்ச்சி.
டைம்ஸ் நவ் விவாதத்தில் பேசிய போது, ஆந்திரப் பிரதேச எம்.பி., ரகு ராமகிருஷ்ண ராஜு, ஆந்திரப் பிரதேசத்தில் மிகப் பெரிய அளவில் மதமாற்றங்கள் நடந்து வருவதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றார். மேலும், ஆந்திரத்தில் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மாநிலங்க்ளிலும் தான் அவ்வாறு நடந்து வருகிறது என்றார்.
YSRCP இன் நாடாளுமன்ற உறுப்பினர் ரகு ராமகிருஷ்ணா ராஜு, டைம்ஸ் நவ் ஊடக விவாதத்தின் போது, ஆந்திராவில் பெரிய அளவிலான மத மாற்றங்கள் நடப்பதாக ஒப்புக் கொண்டார்! கிறிஸ்துவ மிஷனரிகளின் பண பலம் குறித்து இதில் தெளிவாகியுள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய ஒரு விவாதத்தில் ராஜு, “மத மாற்றங்கள் பெரிய அளவில் நடக்கின்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் …” என்றார். ஆனால், இந்த மத மாற்றங்களுக்கு மாநில அரசு ஆதரவளிக்கவில்லை என்றும் அவை கடந்த காலங்களிலும் நிகழ்ந்து வருவதுதான் என்றும் கூறினார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராஜு, “இது கிறிஸ்துவ மிஷனரிகளின் பண பலமாகும், அவர்கள் வெளிநாட்டிலிருந்து பம்ப் செய்து பணத்தை குவிக்கவும், சர்ச்சுகளை அதிக அளவில் கட்டவும் முடியும்”, என்றார்!
பண ஆசையைக் காட்டி தூண்டில் போட்டு கூட்டத்துக்கு ஆள் பிடிக்கும் இத்தகைய சட்டவிரோத மதமாற்றங்களைத் தடுக்க அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று செய்தி தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது, இதுபோன்ற செயல்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன என்று பதிலளித்த ராஜு, , இந்த விவகாரத்தில் எங்கள் அரசாங்கம் என்ன செய்துவிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
உள்ளூர் மக்களை மதம் மாற்றும் நோக்கில் மிஷனரிகள் மிக அமைதியாக, இரவு நேரங்களில் காலனி பகுதிகளுக்குச் சென்று, தங்கள் மதப் பிரசாரக் கருத்துகளை அவர்களுக்குப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் கட்சியின் எம்.பி., ராஜு.
இந்நிலையில், தமிழகத்தில் இது போல் நடைபெறும் கிறிஸ்துவ மதமாற்றங்களுக்கு எதிராக, விஸ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது. தற்போதைய கொரோனா ஊரடங்கு நிலையைக் கூட சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கும் கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்களை தடுக்க தாங்கள் களம் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார் விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் பா.சரவண கார்த்திக்.
இது குறித்து அவர் தெரிவித்தவை…
தமிழகம் முழுவதும் கிராமங்களில் மதமாற்றத்தை தடுக்க துறவியர் பெருமக்களோடு விசுவ ஹிந்து பரிஷத் பணி செய்ய இருக்கிறது. தமிழகம் முழுவதும் 1,000 துறவியர் பெருமக்கள் 10,000 கிராமங்களில் களமிறங்க உள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் சென்று மத மாற்றத்தின் அபாயத்தையும், ஹிந்து தர்மத்தைப் பற்றியும் எடுத்துரைக்க வுள்ளனர்! அதன் பின் தமிழக அளவில் பிரமாண்டமான அளவில் கர்வாப்ஸி எனும், தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும்!
இந்தப் புனிதப் பணிக்கு ஒத்த கருத்துடைய நல்ல உள்ளங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மத மாற்றம் ஒரு தேசிய அபாயம் என்பதை உணர்த்த ஹிந்துக்கள் ஒன்று கூட வேண்டும். இது குறித்த தகவல்களுக்கு என்னை (பா.சரவணகார்த்திக்) 9865891599 என்ற எண்ணிலும், இராம.சத்யமூர்த்தி அவர்களை (வி.ஹெச்.பி, மாநில செயலாளர்) 8220147902 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.