03/07/2020 7:15 PM
29 C
Chennai

ரிமூவ் சைனா ஆப் செயலியை ரிமூவ் செய்தது கூகுள் ப்ளே ஸ்டோர்!

ஒரே மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Must Read

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.

குட்டியானையை மேலே ஏற்றிவிடும் தாய் யானை! வைரல் வீடியோ!

இதனை கண்ட தாய் யானை , குட்டியுடன் சேர்ந்து எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து

கள்ளக்காதலி விலகுவது ஏன்? காரணம் கேட்க சென்ற காதலன்! ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையை கொன்ற கொடூரம்!

கள்ள காதலன், காதலியின் வீட்டிற்கு சென்று காரணத்தை கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டு காதலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
remove china apps feat
remove china apps feat

ஒரே மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது என்பதாலும் தற்போது இந்திய எல்லையில் சீனா, தனது படைகளைக் குவித்துள்ளதாலும், மேலும் சில காரணங்களாலும் சீனப் பொருள்களை வாங்க மாட்டோம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒ

‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ (Remove China Apps) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. அடித்த சில நாளிலேயே இதனை ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்தனர். தொடர்ந்து லட்சக்கணக்கானோர் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர்

remove china app
remove china app

தற்போது 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், ‘ரிமூவ் சீனா ஆப்’ என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சீன செயலியான ‘டிக் டாக்’ செயலிக்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால், அதற்கு மாற்றாக மித்ரன் (Mitron) என்ற செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த இரு செயலிகளையும் நீக்கியதற்கான காரணம் குறித்து கூகுள் நிறுவனத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளால் கூகுள் நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இந்த மொபைல் செயலி மூலமாக லட்சக்கணக்கானோர் தங்கள் மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கியதன் மூலமாக, சீன வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிக்டொக் செயிலிக்கு மாற்றாக அடையாளம் கானப்பட்ட மிட்ரான் செயலியின் நிரல் டிக்டாக் போலவே அமைந்திருப்பதுடன் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

சீன செயலிகளை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ரிமூவ் சீனா ஆப்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட இரு வாரங்களுக்குள் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்து, 4.9 நட்சத்திர ரேட்டிங்ஙை பெற்றிருந்தது.

Remove China Apps செயலியை கூகுள் நீக்கியுள்ள நிலையில் இதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளது. அதாவது எந்தவொரு மூன்றாம் தர ஆப் அல்லது செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு ஊக்குவிக்கக் கூடாது என்ற கூகுளின் விதிகளுக்கு உட்பட்டு இந்த செயலியை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad ரிமூவ் சைனா ஆப் செயலியை ரிமூவ் செய்தது கூகுள் ப்ளே ஸ்டோர்!

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This