ஏப்.11 அன்று சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலைவாய்ப்பு முகாம்

employment-opportunitiesசென்னை: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை ஏப்.11 அன்று நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியரின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தலுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11.04.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், சீனிவாசா அவென்யூ சாலையில் அமைந்துள்ள செட்டிநாடு ராஜhமுத்தையா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாம் மூலம் பல தனியார் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், ரிசப்ஷனிஸ்ட், வாய்ஸ் & நான்வாய்ஸ் பிராசசிங் , டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஆப்தமாலிஸ்ட் கண்சல்டன்ட், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 18 முதல் 35 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி ,பி.ஏ. , பி,எஸ்.சி.., பி.காம்., ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் முதுகலை பட்டதாரி கல்வித்தகுதி உடையவர்கள் தகுதியுடையவர் ஆவார். இப்பணிக் காலியிடங்களுக்கு உரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சான்றுகளுடன் உடன் நேரில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்;