spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கோவைதமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை: முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறவில்லை: முதல்வர்!

- Advertisement -
edappadi meeting
edappadi meeting

தமிழகத்தில் கொரொனா சமூக தொற்றாக மாறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் சிறப்பான முறையில் கொரொனா தடுப்பு பணி நடைபெறுவதால் வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனவும், கோவை மாவட்டத்தில் 36905 பேருக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் 292 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும்,112 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

10 பரிசோதனை மையங்களில் நாள் ஒன்றுக்கு 2000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகின்றது எனவும் கொரொனா தொற்று கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் பல கோரிக்கைகள் முன் வைத்து இருக்கின்றனர் எனவும் அவை நிறைவேற்றப்படும் என தெரிவித்த முதல்வர், வரும் 2020 டிசம்பருக்குள் அவினாசி அத்திகடவு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் எனக்கூறிய அவர், பி.ஏ.பி திட்டத்தில் உள்ள ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தினை செயல்படுத்த கேரள அரசுடன் பேசி இருப்பதாகவும், அந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிளவு பாலத்தை கட்டிக்கொடுத்து இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறு,குறு, நடுத்தர தொழில்களுக்கு 4125 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கடனுதவி பெற்று தரப்பட்டுள்ளது எனவும் செக்யூரிட்டி இல்லாமல் 125 ரூபாய் கடனுதவி இதுவரை வழங்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு தேவையான கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மட்டும்தான் முதல்வருக்கு தெரிகின்றது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்கின்றார் எனக்கூறிய முதல்வர், இன்று கோவை மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்திருக்கின்றேன் எனவும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது. எல்லா மாவட்டங்களுக்கும் சென்றும் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.சேலம் போனால் அங்கு மட்டும் போறேன் என ஸ்டாலின் செல்கின்றார், கோவை வந்தால் , எதற்கு முதல்வர் கோவை செல்கின்றார் என்று பேசுகின்றார் எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு கொரோனா விவகாரத்தில் எதுவுமே செய்யவில்லை என தவறான ,பொய்யான அறிக்கையினை திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்து வருகின்றார் என குற்றம்சாட்டிய அவர், நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் ஸ்டாலின் எனவும் தெரிவித்தார்.அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்காமல், நாள்தோறும் வாடிக்கையாக அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும், நோய் தடுப்பிற்கு ஆக்கபூர்வமான ஆலோசனையை இதுவரை ஸ்டாலின் கொடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு பரப்புவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டு இருக்கின்றார் எனக்கூறிய அவர்,சொந்த செலவில் அதிமுக நிர்வாகிகள் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

திமுகவினர் நிவாரணம் கொடுத்தாக தெரியவில்லை எனவும், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிவாரணம் கொடுத்தனர் எனக்கூறிய முதல்வர், அரசின் வழிகாட்டுதலை கூட திமுகவினர் முறையாக பின்பற்ற வில்லை எனவும் தெரிவித்தார். திமுக நிர்வாகி ஒருவரையும் திமுகவினர் இழந்து இருக்கின்றனர் எனவும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி இருந்தால் சட்டமன்ற உறுப்பினரை இழந்திருக்க மாட்டார்கள் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

வேண்டும் என்றே திட்டமிட்டு தினமும் பொய்யான செய்தியை ஸ்டாலின் கொடுத்து வருகின்றார் எனக்கூறிய முதல்வர்,இறப்பு சதவீதம் குறைந்து , குணமடைந்தவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் 90 நாட்கள் கடுமையாக உழைத்து இருப்பதன் காரணமாகவே நோய் தொற்றலை கட்டுப்படுத்த முடிந்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

90 நாள் ஊரடங்கினை வீணாக்கி விட்டதாக பொய் குற்றசாட்டை திமுகவினர் வைக்கின்றனர் என கூறிய முதல்வர் , 90 நாள் ஊரடங்கில் முன் களப்பணியாளர்கள் முழுமையாக உழைத்ததால் நோய் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

அதிமுக அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதை போல் அரசியல் ரீதியாக ஸ்டாலின் இந்த குற்றசாட்டை முன்வைக்கின்றார் எனவும் முதல்வர் குற்றம் சாட்டினார்.

நாட்டுமக்களை பற்றி ஸ்டாலினுக்கு கவலை கிடையாது எனவும்,ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இப்படி பேசி வருகின்றார் எனவும் , எந்த மாநிலத்திலும் எதிர் கட்சி தலைவர்கள் இப்படி பேசுவதில்லை எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஆர்.பி.ஐ வங்கி கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்துவது குறித்து முழுமையான தகவல் இது வரை தங்களுக்கு வரவில்லை எனவும், அர்பன் பகுதிகளை மட்டும் ஆர்.பி.ஐ கையகப்படுத்துவதாக கூறப்படுகின்றது எனவும், இன்னும் தெளிவான அறிக்கை வரவில்லை எனவும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என கூறிய அவர், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். சாத்தான் குளம் விவகாரம் போல இனி எந்த சம்பவம் நடைபெற கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு டி.ஜி.பி மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் , கொரொனா சோதனை நேரத்தில் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொளள வேண்டும் என கடுமையாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பினிக்ஸ் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக விசாரிக்கின்றது எனவும், மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் , உயர்நீதிமன்றம் வழங்கும் உத்திரவினை இந்த அரசு அமல்படுத்தும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கொரோனா தொற்று முடிந்ததும் 10 ம் வகுப்பு தனிதேர்வர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe