October 20, 2021, 7:17 pm
More

  ARTICLE - SECTIONS

  ஆள்பவர்க்கு தீங்கு உண்டாக்கவென்றே சிலர் ஆலய பூஜையை கெடுக்கிறார்கள்! சுவாமி ஓங்காரனந்த ‘பகீர்’

  முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்கு தீங்குள; வாரி வளங்குன்றும் ; கன்னம் களவு மிகுந்திடும் காசினி; என்னருள் நந்தி எடுத்துரைத் தானே

  swami omkarananda
  swami omkarananda

  சிதம்பரம் கோயில் வழிபாடுக்கு  தடை  ஏற்படுத்தும் நோக்கில், ஆனித் திருமஞ்சனத்துக்கு ஊறு ஏற்படுத்தியிருக்கும் அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பூஜ்யஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகள். 

  அவர் இதுகுறித்து ஒரு காணொளிப் பதிவினை வெளியிட்டுள்ளார். திருமந்திர பாடலை மேற்கோள் காட்டி, சிதம்பரத்தில் அவசியம் வழிபாடுகள் முறையாக நடத்தப்பட வேண்டும் இதை அரசு தடுப்பது நாட்டுக்கு கேடு விளைவிக்கும் என்பதை எடுத்துச் சொல்லி அரசாங்கத்தின் செயலை வன்மையாக கண்டிப்பதாக பூஜ்யஸ்ரீ ஓங்காரநந்த தெரிவித்துள்ளார்.

  காணொளிக் காட்சியில் அவர் தெரிவித்திருப்பவை… 

  திருமூலரின் திருமந்திர பாடல் இரண்டாம் தந்திரம் நான்காம் பாடல் திருக்கோயில் என்ற தலைப்பில் பாடப்பட்ட பாடல். “முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்கு தீங்குள; வாரி வளங்குன்றும் ; கன்னம் களவு மிகுந்திடும் காசினி; என்னருள் நந்தி எடுத்துரைத் தானே – என்று பாடியுள்ளார். 

  கொரோனா என்ற காரணம் காட்டி, இவ்வாறு பூஜையை முடக்குவது சரியல்ல. முன்னவனார் கோயில் பூசைகளுக்கு தீங்கு செய்யக் கூடாது. அப்படியெனில், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.  டாஸ்மாக் கடையை திறந்து வைத்து, கோயிலுள் நடைபெறும் பூஜையை இப்படி தடுப்பது   தவறானது. 

  கொரோனா ஒருபுறம் இருக்கட்டும் கள்ளுக்கடையை மூடாமல் இவ்வாறு செய்வது நம் மன வருத்தத்தை அதிகரிக்கிறது. டாஸ்மாக் கடைகளையும் திறந்து வைத்து கோயில் பூஜைகளில் அரசு தலையிடுவது என்றால் எங்கோ தவறு நடக்கிறது.  அரசில் தேவை இல்லாத சிலர் தலையிட்டு இவ்வாறு செய்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

  இந்தப் பாடலின் பொருள் என்ன என்றால் முன்னவனார் கோயில் பூசைகள் … சிதம்பரம் சைவர்களுக்கு முக்கியமான கோயில். ஆதினங்கள், ஆதி சைவர்களான  பெரியவர்கள் எல்லாம் இதற்கு வருத்தப்பட்டு குரல் கொடுத்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால் அவர்கள் அனைவரும் ஒருசேர அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ….

  பூஜைக்கு தடை ஏற்பட்டால் நாட்டின் மன்னனுக்கு கெடுதல் ஏற்படும். அது இங்கே ஆளுபவராக இருக்கலாம் அல்லது மத்தியி ஆளுபவராக  இருக்கலாம் அவ்வாறு ஏற்பட வேண்டும் என்று நினைத்துத்தான் இவ்வாறு செய்கிறார்களோ என்னவோ?! ஏனென்றால், மத்திய அரசு அமைச்சர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு இங்கு பலர் நடந்துகொள்கிறார்கள். இந்து மதத்தை அழிக்கவேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது.

  chidambaramnataraj
  chidambaramnataraj

  நம் மதத்திலும் அறியாமையினால் பலர் இவ்வாறு செய்கிறார்கள் இந்து மதத்திலும் அறியாமையால் இவ்வாறு செய்வது வருத்தத்தை அளிக்கிறது நம் மனதை புண்படுத்துகிறது. பலர் உள்ளுக்குள்ளேயே வைத்து கொண்டு வெளியில் சொல்லாமல் தவிக்கிறார்கள். சிவனடியார்கள் பக்தர்கள் எல்லோரும் தவிக்கிறார்கள் 

  மன்னருக்கு தீங்கு ஏற்படும்; நீர் நிலைகள் நிரம்பாது தண்ணீர் கஷ்டம் வரும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி அதாவது இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் திருட்டு பயம் கொலை கொள்ளை அதிகமாகிவிடும் என்று நந்தி எடுத்துரைத் தானே என்று சொல்வதன் மூலம் சிவபெருமான் எனக்கு இந்த உண்மையை எடுத்துரைத்தான் என்று திருமூலர் இதனை சொல்கிறார் 

  எனவே அரசு அதிகாரிகள் இது போன்ற பாடல்களை படித்து புரிந்து கொண்டு உண்மையை உணரவேண்டும். வழிபாடுகள் நடத்தக் கூடாது என்றால் நிச்சயம் டாஸ்மாக் கடைகளையும் நீங்கள் அடைக்க வேண்டும்! அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்! பணத்துக்காக அநியாயம் எதையும் செய்யக் கூடாது!

  அதை நாம் மிகுந்த மன வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்! இந்தப் பாடலையும் சிவபக்தர்கள் நிச்சயமாக ஏற்று அதன்படி செய்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்னுடைய இந்த கண்டனத்திற்கு எல்லோருடைய ஆதரவையும் நான் வேண்டுகிறேன். தர்ம ரக்ஷண ஸமிதி தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் இந்த கருத்தை நான் பதிவு செய்கிறேன் … என்று அவர் அந்த காணொளியில்  தெரிவித்துள்ளார்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-