Home இந்தியா இந்திய சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலி அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பின்பற்றுகிறது: டிக்டாக் இந்தியா!

இந்திய சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலி அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பின்பற்றுகிறது: டிக்டாக் இந்தியா!

tik tok

டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து டிக்டாக் இந்தியா டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டதில் அடங்கும். இந்த பயன்பாடுகளை தடைசெய்ததற்காக தேசிய பாதுகாப்பை அரசாங்கம் மேற்கோளிட்டுள்ளது.

“இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது என்று கண்டறியப்பட்ட பின்னர் தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட 59 சீன ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தி டிக் டாக் இந்தியா டிவிட்டர் பக்கத்தில், “டிக் டாக் உட்பட 59 செயலிகளின் பயன்பாடுகளை தடுக்க இந்திய அரசு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது, அதனுடன் இணங்குவதற்கான செயல்பாட்டில் உள்ளோம். டிக் டாக் செயலி குறித்து பதிலளிப்பதற்கும் தெளிவு படுத்தவதற்காகவும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளை சந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

இந்திய சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலி அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் பின்பற்றுகிறது, மேலும் சீனா உட்பட எந்தவொரு வெளிநாடுகளுடனும் இந்தியாவில் உள்ள எங்கள் பயனர்களின் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. எதிர்காலாத்தில் தேவைப்பட்டாலும் நாங்கள் அதை செய்ய மாட்டோம்.

டிக் டாக் 100 மில்லியன் பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்பவர்கள், கல்வியாளர்கள், ஆகியோருடன் 14 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் இணையத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது, இது அவர்களின், வாழ்வாதாரத்தைப் பொறுத்து. அவர்களில் பலர் முதல் முறையாக இணைய பயனர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version