Home இந்தியா ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்!

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக… மூன்று துறைமுகங்கள்; ஏழு ஷிப்பிங் யார்டுகள்!

andrapradesh port

ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று மேஜர் போர்ட்டுகள், ஏழு ஷிப்பிங் யார்டுகள் உருவாக்குவதற்கு முதல்வர் ஜெகன் நடவடிக்கை எடுத்துக் கொண்டு உள்ளதாக மாநில ஐடி மற்றும் தொழிற்சாலை துறை அமைச்சர் மேகபாடி கௌதம் ரெட்டி தெரிவித்தார்.

பிரகாசம் மாவட்டத்தில் ராமாய பட்டிணம் துறைமுகம் உருவாக்கத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளார்கள். இந்தப் பின்னணியில் போர்ட் ஏற்படுத்துவதோடு கூட அதற்கு துணையாக தொழிற்சாலைகளையும் உருவாக்க வேண்டும் என்பதால் அதற்கான நிலங்களை தேர்ந்தெடுப்பதற்காக கௌதம் ரெட்டியோடு கூட நீர்வளத் துறை அமைச்சர் அனில்குமார் யாதவும் சனிக்கிழமை பிரகாசம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் ராவூரு, சேவூரு கிராமங்களில் சில நிலங்கள், அவற்றிற்கு தொடர்பான மேப் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் போல பாஸ்கரோடு சேர்ந்து இருவரும் ஆராய்ந்தார்கள்.

அதன்பின் கௌதம் ரெட்டி நிருபர்களிடம் பேசுகையில் துறைமுகம் கட்டுவதற்கு 3200 ஏக்கர்கள் தொழிற் சாலைகளின் உருவாக்கத்திற்கு 2,000 ஏக்கர்கள் மொத்தம் 5200 ஏக்கர் நிலம் சேகரிக்க தீர்மானித்திருப்பதாக கூறினார்.

port

ராமாயபட்டிணம் துறைமுகத்தை உருவாக்குவதற்கு ஜப்பான், நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த பல கம்பெனிகள் உற்சாகத்தோடு உள்ளன என்று கூறினார். துறை முகத்தோடு கூட தொழிற்சாலைகளும் உருவாவதற்கு நிலங்களை ஒதுக்கிக் கொடுத் தால் மும்பை, தில்லி நகரங்களின் அளவுக்கு இந்த இடங்களிலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கம்பெனிகள் கூறுவதாக விவரித்தார்.

இதன் தொடர்பாக விரைவில் டிபிஆர் தயார் செய்து ஆகஸ்ட் 15 க்குள் டெண்டர்கள் அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார். ஒரே அடியாக 5500 ஏக்கர் நிலம் சேகரிப்பதற்கு நோட்டிபிகேஷன் கொடுக்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் கலெக்டரிடம் குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version