Home சற்றுமுன் 300 பேரைக் கூட்டி வைகையில் தர்ப்பணம்… புரோகிதர் கைது!

300 பேரைக் கூட்டி வைகையில் தர்ப்பணம்… புரோகிதர் கைது!

vaigai-padithurai
vaigai-padithurai file pic

மதுரையில் பொது ஊரடங்கு மீறி
வைகை ஆற்றங்கரையில் 300 பேரைக் கொண்டு தர்ப்பணம் செய்த புரோகிதர் கைது!
காவல்துறை விசாரணை!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அத்துமீறி பொது இடங்களில்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆடி அமாவாசை என்பதால் ஆற்றங்கரைகள், கோவில் குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கோவில்கள் ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரையில் காவல் துறையின் அனுமதியின்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வைத்து புரோகிதர் ஒருவர் தர்ப்பணம் செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

மேலும் புரோகிதரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அலட்சியமாக 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஆற்றங்கரையில் அமரவைத்து தர்ப்பணம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version