ஏப்ரல் 21, 2021, 10:48 காலை புதன்கிழமை
More

  இது படையப்பாவின் குரல்! என்ன… கொஞ்சம் லேட்டு!

  கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி - என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

  rajini speech kamal function
  rajini speech kamal function

  கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி – என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

  • கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களை புண்படுத்தி கொந்தளிக்க செய்து விட்டனர்
  • கந்தனுக்கு அரோகரா… என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த் பதிவு
  • வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஈனச் செயலை செய்தவர்கள் மீது தமிழக அரசு துரித நடவடிக்கை
  • சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்…
  • மத துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஓழியணும்…

  கருப்பர் கூட்டம் என்ற ‘யு டியூப்’ சேனலில், ஹிந்துக்கள் மனம் புண்படும் வகையில் இந்துக்கள்   வழிபடும் கடவுள்களை இழிவுபடுத்தி, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. அந்த தொடர்ச்சியான வீடியோக்களின் ஒரு பகுதியாக முருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்தசஷ்டி கவசத்தை, கேவலமாக சித்தரித்தும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது

  இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்த யு டியூப் சேனல் நிர்வாகிகளான சென்னை  போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அந்த சேனலில் இருந்து 500க்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கப்பட்டன.

  இந்த விவகாரம் அரசியல் மட்டத்திலும் சமூக வலைதளங்களிலும் உச்சகட்டமாக விவாதிக்கப்பட்டு வந்தபோது வாய் மூடி மௌனியாக இருந்த ரஜினிகாந்த் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர் ஆன்மீகவாதியாக தன்னை காட்டிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் ஏன் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் மௌனத்துடன் இருக்கிறார் என்ற கேள்விகளையும் முன்வைத்தனர் இந்த நிலையில் இன்று இந்த விவகாரத்தில் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது….

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »