spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஊடகத் துறையில் வேரூன்றிய திக., திமுக., இடதுசாரி அரசியல்! கூட்டறிக்கை கூறும் ‘ரகசியம்’!

ஊடகத் துறையில் வேரூன்றிய திக., திமுக., இடதுசாரி அரசியல்! கூட்டறிக்கை கூறும் ‘ரகசியம்’!

- Advertisement -
karuppar-koottam-politics
karuppar-koottam-politics

திராவிட இயக்கத்தினர், தங்கள் பொய்களைப் பரப்புவதற்கென்றே பிரசாரத் தளங்களாக சினிமாக்களையும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களையும் வெகுகாலமாகவே பயன்படுத்தி வந்தனர்.

தனது ஆபாச வசனங்களாலும் பேச்சுகளாலும் காஞ்சிபுரம் அண்ணாதுரை இளைஞர்களை மலின ரசனைக்கு திருப்பினார். மேலை நாடுகளில் தோன்றிய ஹிப்பி கலாசாரத்தை தமிழகத்தில் புகுத்துவதற்காக கிறிஸ்துவ மிஷனரிகள், இடதுசாரிகள், திராவிட இயக்கங்கள் கூட்டணி பெரிதாக களத்தில் இறங்கியது. மக்களை மது போதையிலும், மலினமான ஒழுங்கினமற்ற செயல்களிலும் ஈடுபடுத்தி, அரசியல் ரீதியாக அதிகாரத்தைப் பிடித்து, அரசு கஜனாவை கொள்ளை அடித்து தங்களுக்கு சொத்துக்களை சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு களத்தில் இறங்கியதை அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் சமூகத்தின் பால் உண்மையான அக்கறையுள்ள தலைவர்கள் வேதனையுடன் எச்சரிக்கை செய்தனர்.

ஆனால் இந்த இயக்கங்கள் தாங்கள் நினைத்ததை சாதிக்க பல்வேறு உருவங்களில் களத்தில் இறங்கின. அதில் ஒன்று பிரசார ஊடகத் துறை. இந்தத் துறையில் ஒரு பெரும்படையைக் களம் இறக்குவதற்காகவே தாங்களே ஊடகங்களை நடத்துவது, அரசாட்சிக்கு வந்து பொதுவான ஊடகங்களை மிரட்டி வளைப்பது என்று செயல்பட்டன. அதன் விளைவாக, திக., திமுக., இடதுசாரி மார்க்சிய கிறிஸ்துவ மிஷனரி கூட்டுக் கலவையில் ஊடகங்களில் பலர் உள்ளே திணிக்கப் பட்டனர். அவர்களின் மூலம் மக்களிடம் கருத்துருவாக்கத்தை செயல்படுத்தவும் திணிக்கவும் பெருமளவில் பணம் முதலீடாக்கப் பட்டது.

இந்நிலையில், தற்போது காட்சி ஊடகங்களின் காலமாக இருப்பதால், அவற்றின் மூலம் இந்தக் கருத்துத் திணிப்பு பெரிய அளவில் மேற்கொள்ளப் பட்டது. இது குறித்து தேசிய சிந்தனையாளர்கள், தங்கள் வருத்தங்களையும் கவலையையும் அவ்வப்போது வெளிப்படுத்தியே வந்தனர். ஆனாலும், அவர்களின் கை மேலோங்கி சமூகத்தில் அமைதியின்மை உருவாகிய போது, இந்த நேரத்தில் மாரிதாஸ் என்ற சமூக வலைத்தள செயல்பாட்டாளர் குரல் கொடுக்க, இப்போது மீண்டும் இந்தக் குரல் உயர எழுந்துள்ளது.

குறிப்பாக, நியூஸ் 18இல் இருந்து செயல்படும் திராவிடர் கழகத்தினர் குறித்தும், அங்கே செயல்பட்டு வரும் தேச விரோதப் போக்கு, பிரிவினைவாதப் போக்கு குறித்தும் யுடியூப் வீடியோ பதிவில் மாரிதாஸ் எடுத்துக் காட்ட, பிரச்னை வெடித்துக் கிளம்பியது.

நியூஸ் 18 கருப்புச் சட்டைகளின் கூடாரமாக மாறியதை அவர் ஒருவராவது சுட்டிக் காட்டினாரே என்ற திருப்தி இருப்பதாக பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பதிவுகளில் கருத்துகளை வெளியிட்டனர்.

வளர்மெய்யறிவான் என்ற விஷ்வா என்பவர், ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் மாரிதாசுக்கு எச்சரிக்கை என்று அவர் கூறிய கருத்துகளும், இன்னும் கருப்பர் கூட்டத்துக்காக ஊடகத்தினர் சிலர் பரிந்து கொண்டு பேசியதும், கருப்பர் கூட்டம் ஏதோ நியூஸ் 18ல் இருந்து தான் இயங்குகிறதோ என்ற தோற்றத்தை வெளிக்காட்டியது.

நாவடக்கத்தோடு பேசவேண்டும் – மாரிதாசுக்கு எச்சரிக்கை | Maridass must watch his tongue

இடையே மாரிதாஸ் குற்றம் சாட்டியதற்கு ஒப்புக் கொண்டு நியூஸ் 18 நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியதாக ஒரு இமெயில் வெளியாகி, போலி நிர்வாக இமெயில் உலவலை வெளிப்படுத்தியது. இதை அடுத்து, விவகாரம் பெரிதாக, இந்த இமெயில் நியூஸ் 18 நிர்வாகத்தில் ஒருவர் பெயரை தவறாக பயன்படுத்தி, உள்ளிருந்தே அனுப்பப் பட்டது கண்டறியப் பட்டது.

இந்நிலையில், ஹசீப் என்பவரும் இளையபாரதி என்பவரும் நியூஸ் 18ல் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் ஹசீப் தான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்க நிறுவனர் என்றும், இளையபாரதி அவரால் மடைமாற்றப்பட்ட ஒரு சாதாரண நபர் என்றும் சமூகத் தளங்களில் தகவல் வைரலானது! மேலும் நியூஸ் 18இல் குணசேகரனின் அதிகாரம் குறைக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

இவ்வாறான நிகழ்வுகளைக் கண்டு, கொதித்தெழுந்துள்ள ஊடகவியலாளர்கள் சிலர், தாங்கள் கையெழுத்திட்டு, கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை*

ஊடகத்துறையினர் இன்று தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பல்முனை தாக்குதலைஎதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் சில சக்திகள் ஊடகங்கள், பத்திரிகைகள் இதைத்தான் பேச வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில் உத்தரவிட முயல்கின்றன.

பல கருத்து உடையவர்கள் ஊடகத்தில் இணைந்து பணியாற்றும் நிலையில் குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்டவர்கள் மட்டும் ஊடகத்தில் இடம் பெறக்கூடாது என்ற பிரச்சாரத்தை அந்த சக்திகள் முன்வைக்கின்றன. அந்த சக்திகள், சில ஊடகங்களின் உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி குறிப்பிட்ட சிலரை நீக்க வேண்டுமென்றும் அச்சுறுத்துகின்றன.

சுதந்திரப் போராட்ட காலத்திலும் எமர்ஜென்சியிலும் பத்திரிகைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் தணிக்கை முறையை சந்தித்து அந்த அடக்குமுறையிலிருந்து வெற்றிகரமாக மீண்டு உள்ளன. இன்றைய சூழலில் தங்களைத் தாங்களே நடுநிலையாளர்கள், தேசபக்தர்கள், என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு புறப்பட்டுள்ள சக்திகளின் அச்சுறுத்தல் அதிகமாகி விட்டது. தமிழ்நாட்டில் திட்டமிட்ட நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர். இத்தகைய சக்திகளின் நெருக்குதல்களை ஊடகவியலாளர்கள் தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். தனிநபர் ஆபாசத் தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆளாக நேரிட்டுள்ளது. குடும்பத்தினர் மீதும் விமர்சனம் வைக்கின்றனர். இந்தப் போக்கு சுதந்திரமான ஊடகச் செயல்பாட்டுக்கு தடை ஏற்படுத்துகிறது.
காவல்துறை இப்பிரச்சனையில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசமைப்புச் சட்டம் வழங்கிய கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்மைத்துவம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தை ஆதரிக்கும் வகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்து இடுகிறோம்.

A.S.பன்னீர்செல்வம், Readers editor, The Hindu
இரா.ஜவஹர்
சுரேஷ் நம்பத்
ஜென்ராம்
விஜய்ஷங்கர், Frontline
சிகாமணி
R.ரங்கராஜன், சென்னை நிருபர்கள் சங்கம்
பொன்.தனசேகரன்
ராஜேஷ் சுந்தரம்
R.K.ராதாகிருஷ்ணன், Frontline
A.R.பாபு, தலைவர், கோயம்புதூர் பிரஸ் கிளப்
ராயப்பா
மயிலை பாலு
விஜய் சேகர்
‘தீக்கதிர்’ குமரேசன்
S.M.கணபதி
சாவிதிரி கண்ணன்
மணா
மணிஷ்யாம்
பீர் முகம்மது, இப்போது.com
கவின்மலர்
ஐயன் கார்த்திகேயன், ஆசிரியர், Youtun.in
M.அசீப், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்
R.விக்ரமன், அரசியல் பிரிவு ஆசிரியர், Galatta.com
தம்பி தமிழரசன்
கார்த்திகேயன்
பிரபாகர் தமிழரசு
தேஜஸ் ஹராட், Economic and Political Weekly
பாலகிருஷ்ணா கணேசன், The News Minute
கவாஸ்கர், தீக்கதிர்
S.P.பாரதி, The News Minute
ஆகாஷ் போயம், The Caravan
மேகா காவேரி, The News Minute
கிரீஷ்மா குதார்
செந்தளிர் சிவலிங்கம்
R.அபய், Web editor, The Caravan
ராஜேஷ் ராஜாமணி
C.சாகர், The Caravan
ஸ்ரீவித்யா
அமுதா
தமிழ் இராஜேந்திரன் வழக்கறிஞர், கரூர்.

முன்னதாக, ஊடகத்தினர் எப்படி எல்லாம் துன்பப் பட்டனர், அவர்களுக்கு ஆதரவாக எவருமே குரல் கொடுத்ததில்லையே என்று சமூகத் தளங்களில் சில கேள்விகள் முன்வைக்கப் பட்டன…. அவை …!

ரங்கராஜ் பாண்டே தந்திடிவியில் இருந்து விரட்டபட்டபொழுது காக்கபடா ஊடக தர்மம், மதன் டிவி டிவியாய் சிறகொடிந்த பறவையாக விரட்டபட்டபொழுது காக்கபடா ஊடக தர்மம்

அட அவருக்கு முன்பே ரபிபெர்னாட் என்பவர் ஓட ஓட விரட்டபட்டபொழுது காக்கபடா ஊடக தர்மம்

கலைஞர் டிவியில் முன்னாள் பணியாளர்கள் வெட்டிவிட பட்டபொழுதும் இன்னும் விகடனில் ஏகபட்ட ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி விரட்டபட்டபொழுதும் காக்கபடா ஊடக தர்மம்

குணசேகரனார் என்பவரை நீக்கும்பொழுது மட்டும் காக்கப் பட்டே தீரவேண்டுமாம்

kalaikovan
kalaikovan

ரவி பெர்னாட்டால் துவங்க பட்ட #நிலா டிவி ஒரே வாரத்தில் முடக்கப் பட்ட போது
ஸ்டார் குரூப்பின் #விஜய் டிவியின் தற்காலிக செய்தியை நிரந்தரமாக முடக்கிய போது
ராஜ் டிவி உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்த போது
ஜெயா டிவியை முடக்கி வைத்த போது
பாலிமர் டிவியை முடக்கிய போது
தினகரன் பத்திரிக்கை அலுவலகம் கொளுத்தப்பட்ட போது
இது போண்ற பல தொலைக்காட்சிகளை முடக்கிய போது பல நேர்மையான ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்ய வைக்கப் பட்ட போதெல்லாம் வராது #சேவு_ஊடகம்
இந்த #குணா & கோ விற்கு மட்டும் வருது என்றால்
சந்தேகம் வரத்தானே செய்யும்
நீங்களே உங்க தலையில் மண்ணை அள்ளி அதுவும் #பெரியார் மண்ணை அள்ளி போட்டுக்குறீங்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe