சென்னை: தமிழகம் மற்றும் இலங்கையின் மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 24ஆம் தேதி சென்னையில் நடத்தத் தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது. தமிழக் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முயற்சிகளை மேற்கொண்டார். அதன் காரணமாக சென்னையிலும், கொழும்பிலும் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம், தேதி போன்றவற்றை, இலங்கை மற்றும் தமிழக அரசிடம் பேசி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிர்ணயித்து வந்தது. இந்நிலையில் 3-ம்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மார்ச் 5-ந் தேதி நடத்துவதாக தமிழக தரப்பும், மார்ச் 11-ந் தேதி என்று இலங்கை அரசும் அறிவித்தது. இரு தினங்களுமே இருதரப்புக்கும் சரிவராத நிலையில், தற்போதுன் மார்ச் 24ம் தேதி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்கு, தமிழக அரசு நேற்று எழுதிய கடிதத்தில், வரும் 24 ஆம் தேதி சென்னையில் இருநாட்டு மீனவர்களின் 3வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இருப்பதாக கடிதம் எழுதி உள்ளது.
தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari