ஏப்ரல் 21, 2021, 10:19 காலை புதன்கிழமை
More

  அதிர்ச்சி… பிரஸ்மீட்டில் லைவ்வில் விஷம் குடித்த ஜெகன் கட்சி மகளிர் தலைவி!

  பிரஸ் கிளப்பில் இப்படிப்பட்ட எதிர்பாராத சம்பவம் நடந்ததும் அதுவும் கொரோனா சமயத்தில் நடந்ததும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது

  jhonykumari2
  jhonykumari2
  • ஷாக்கிங்… லைவ்வில் விஷம் குடித்த ஒய்சிபி மகிளா தலைவர்.
  • சொந்த அரசாட்சியே தனக்கு நியாயம் செய்யவில்லை என்று…

  சென்ற வருடம் ஆட்சிக்கு வந்த ஒய்சிபி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற சந்தர்ப்பத்தில் தமக்கு பல அம்சங்களில் நியாயம் நடக்கவில்லை என்று பல ஒய்சிபி கட்சித் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

  ஜகன் கட்சியைச் சேர்ந்த மகிளா தலைவர் ஜோனி குமாரி விஜயவாடாவில் ஒரு பிரஸ்மீட்டில் சரியாக இதுபோன்ற சூழ்நிலையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக தற்கொலை முயற்சியை தேர்ந்தெடுத்தார்.

  பிரஸ் கிளப்பில் சாதாரணமாக பிரஸ்மீட் நிர்வகிப்பதற்கு வந்த அந்த மகிளா தலைவர் இடையில் விஷம் குடிக்கத் தொடங்கினார். இறுதியில் போலீசார் களத்தில் புகுந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் .

  jhonykumari1
  jhonykumari1

  அது விஜயவாடா காந்திநகர் பிரஸ் கிளப். திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பிரஸ்மீட் நிர்வகிப்பதற்கு ஒய்சிபி கட்சியை சேர்ந்த மகிளா தலைவர் மற்றும் ‘மால மகாநாடு’ மாநில தலைவர் கூட ஆகிய ஜோனி குமாரி அங்கு வந்து சேர்ந்தார்.

  வந்தவுடனேயே பிரஸ்மீட் தொடங்கின அவர் ஒய்சிபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் தமக்கு அனைத்து விதத்திலும் நியாயம் நடக்கும் என்று ஆசைப்பட்டார் என்றும் ஆனால் தன்னை சிலர் மோசம் செய்து விட்டு ஏமாற்றி விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

  இந்த விவகாரம் பற்றி கட்சித்தலைவர் ஜெகனை எத்தனை முறை சந்திப்பதற்கு முயற்சித்தாலும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்

  சிறிது நேரத்திற்குள்ளாகவே அவர் தன்னோடு எடுத்து வந்த விஷ பாட்டிலை திறந்து குடிப்பதற்கு தொடங்கினார். முதலில் என்ன நடக்கிறது என்று புரியாத குழப்பத்தில் ஆழ்ந்த மீடியா பிரதிநிதிகள் அதன் பின் மீண்டும் ஒருமுறை அவர் விஷத்தை குடித்து மயங்கிய உடனே போலீசாருக்கு புகார் அளித்தனர். இதனால் போலீசார் அங்கு வந்து சேர்ந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

  jhonykumari
  jhonykumari

  பிரஸ்மீட்டில் மீடியாவோடு பேசுகையில் ஒய்சிபி கட்சியை தன் சொந்த குடும்பத்தை போல் நினைத்ததாகவும் ஆனால் சிலர் தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார். ஆனால் யார் ஏமாற்றுகிறார்கள் என்று அவர் பெயரைக் குறிப்பிடவில்லை.

  இந்த மாதம் ஆறாம் தேதி ஒய்சிபி எம்பி விஜயசாயி ரெட்டி யை சந்தித்து தன் பிரச்சினைகளை குறித்து விவரித்தார் என்றும் ஆனால் தனக்கு நியாயம் நடக்கவில்லை என்றும் ஜோனி குமாரி தெரிவித்தார்.

  முதலமைச்சர் ஜகனை சந்திப்பதற்கு முயற்சித்தாலும் முடியவில்லை என்றும் அதனால் அவருக்கு ஈமெயில் ட்விட்டர் மூலம் பிரச்சினைகளை விபரங்களை தெரிவித்து அனுப்பியதாகவும் ஜோனி கூறினார். ஆனால் தமக்கு நியாயம் நடக்கவில்லை என்றும் பெண்களின் விஷயத்தில் நியாயம் செய்வோம் என்று கூறும் ஒய்சிபியில் பதவிகளை பெற்ற சிலர் தனக்கு செய்த அநியாயங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஆசைப்பட்டதாகவும் ஜோனிகுமாரி அதற்கு முன்பு வெளிப்படுத்தினார்.

  பிரஸ்மீட் நடக்கும் போதே இரண்டு முறை தான் எடுத்து வந்த விஷம் குடித்த ஜோனிகுமாரி அதன் பிறகு தன்னை யாரும் காப்பாற்ற வேண்டாம் என்று கூறினார். ஆனால் அங்கேயே இருந்த அவருடைய கார் டிரைவர் 108க்கு போன் செய்தார். ஆனால் 108 வரும் முன்பாகவே மீடியா பிரதிநிதிகள் அளித்த புகார் மீது அங்கு வந்து சேர்ந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

  தற்போது அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். விஜயவாடா நகரம் நடுவில் உள்ள பிரஸ் கிளப்பில் இப்படிப்பட்ட எதிர்பாராத சம்பவம் நடந்ததும் அதுவும் கொரோனா சமயத்தில் நடந்ததும் போலீசாரோடு கூட உள்ளூர் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .

  ஆட்சியில் உள்ள கட்சியான ஒய்சிபி யைச் சேர்ந்த மகிளா தலைவர் ஆவதாலும் மால மகாநாடு மகிளா தலைவராகக் கூட இருப்பதாலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »