ஏப்ரல் 23, 2021, 7:51 காலை வெள்ளிக்கிழமை
More

  நெல்லூரில் சோகம்… மனதை கலக்கும் இரட்டையர் மரணம்!

  நெல்லூர் மாவட்டத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது. அனுமசமுத்திரம் பேட்டையை சேர்ந்த வேமன சந்து, ரமேஷ் இருவரும் இரட்டையர்கள்.

  nellore-twins-died
  nellore-twins-died

  ஒரே பிரசவத்தில் இருவர் பிறந்தால் பெற்றோர் எத்தனை மகிழ்ச்சி அடைவர் என்பதை கூறத் தேவையில்லை.

  பிரசவமான பின் ஒரு புதுவரவு இருக்கும் என்று எண்ணும்போது இருவர் வீட்டிற்குள் வருவது என்பது நிச்சயம் பெற்றோர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி தான். இரட்டைக் குழந்தைகள் ஒன்றாக வளர்ந்து ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது வழக்கம். ஒருவரை பிரிந்து ஒருவர் இருக்க முடியாமல் அன்பு அவர்களை ஒன்றிணைக்கும்.

  ஆனால் இங்கு ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளான இரட்டையர்களின் வாழ்க்கையை மது பாதியிலேயே நிறுத்தி விட்டது. நெல்லூர் மாவட்டத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது. அனுமசமுத்திரம் பேட்டையை சேர்ந்த வேமன சந்து, ரமேஷ் இருவரும் இரட்டையர்கள்.

  அருந்துவதற்கு மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து உயிரை விட்டார் ரமேஷ். தம்பியின் மரணம் சந்துவை ஆழமாக தாக்கியது. அதனால் தனியாளாகி விட்டோம் என்ற வருத்தத்தால் சந்து கவலையில் ஆழ்ந்தார். ரமேஷின் அந்திமக் கிரியைகள் நடக்கையில் சந்து துயரம் தாங்காமல் மயங்கி விழுந்தார்.

  குடும்பத்தினர்களும் உறவினர்களும் சந்துவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். சந்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதற்குள்ளேயே மரணமடைந்ததாக கூறினார்கள். வளர்ந்து வரும் இளைய மகன்களின் திடீர் மரணத்தால் அந்த பெற்றோர் தீராத சோகத்தில் மூழ்கினர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »