ஏப்ரல் 21, 2021, 9:50 காலை புதன்கிழமை
More

  ஆந்திரத்தில் ஒரு ‘சாத்தான்’குளம் சம்பவம்! மாஸ்க் அணியாத இளைஞர்; போலீஸ் தாக்கி மரணம்!

  பிரகாசம் மாவட்டம் சீராலாவைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞன் மரணம் பற்றி விவாதமும் போராட்டமுமாக சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

  ap-youth-beat-died
  ap-youth-beat-died

  மாஸ்க் அணிய வில்லை என்று கிரண் என்ற இளைஞரை அடித்துக் கொன்ற போலீஸ் அதிகாரி.

  சீராலா எஸ்ஐ விஜயகுமார் தாக்கியதால் கிரண் என்ற தலித் இளைஞன் குண்டூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது புதன்கிழமை காலை மரணம் அடைந்தார்.

  இந்த மாதம் 18ம் தேதி பைக்கில் மாஸ்க் அணியாமல் சென்று கொண்டிருந்தார் என்று ஆத்திரம் அடைந்த எஸ்ஐ விஜயகுமார் லாட்டியால் கிரண் என்ற இளைஞனை தீவிரமாக அடித்து தாக்கினார். அதனால் மயங்கி விழுந்த இளைஞனை எஸ்ஐ ஊழியர்களோடு சேர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

  இந்த சம்பவம் குறித்து முழு விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி யை முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரித்தறிந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரண் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் பரிகாரம் அறிவித்துள்ளார்.

  இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

  ap-youth-beat-died1
  ap-youth-beat-died1

  சீராலாவில் இந்த மாதம் 18ம் தேதி எஸ்ஐ தாக்கியதால் மரணமடைந்த தலித் இளைஞன் கிரண் வழக்கு குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோபம் வெளிப்படுத்தியுள்ளார். மாவட்ட எஸ்பி யிடமிருந்து இந்த சம்பவம் குறித்து விவரங்களை முதல்வர் அலுவலகம் சேகரித்தது. இளைஞனின் மரண வழக்கு மீது உயர் அளவில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

  இறந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிகாரம் அறிவித்துள்ளார்.

  இந்த சம்பவம் மீது எஸ்பி சித்தார்த் கௌசல் விவரிக்கையில்… சீராலா இளைஞனை எஸ்ஐ விஜயகுமார் தாக்கினார் என்பது உண்மை அல்ல என்று கூறினார்.

  இந்த மாதம் 18 அன்று சீராலா 2 டௌன் எல்வையில் கிரண், ஆபிரஹாம் ஷைன் என்ற இரு இளைஞர்களும் மாஸ்க் அணியாமல் பைக் மீது அலைந்து கொண்டிருந்ததால் எஸ்ஐ விஜயகுமார் நிறுத்தி இளைஞர்களுக்கு கவுன்சிலிங் அளித்தார் என்று தெரிவித்தார். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் இருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்கள் என்று கூறினார். அதனால் இளைஞர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கையில் கிரண் கீழே குதித்து தப்பி ஓட முயற்சித்ததில் தலைக்கு பலமான காயம் ஏற்பட்டது என்று கூறினார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சிகிச்சை அளித்து வரும் போது கிரண் நேற்று மரணமடைந்ததாகவும் அவர் கூறினார்.

  பிரகாசம் மாவட்டம் சீராலா நகரில் போலீசாரின் அக்கிரமத்தால் தலித் இளைஞனின் மரணம் என்று ஆந்திராவில் ஒரே பரபரப்பு.
  அந்த இளைஞனை சீராலா அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். நிலைமை மோசமானதால் அங்கிருந்து குண்டூர் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். உடல் நிலைமை தேறாததால் மருத்துவத்திற்காக ஒரு பிரைவேட் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது புதன்கிழமை காலையில் கிரண் மரணமடைந்தார்.

  பிரகாசம் மாவட்டம் சீராலாவைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞன் மரணம் பற்றி விவாதமும் போராட்டமுமாக சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.

  போலீசாரின் தாக்குதலில் அந்த இளைஞன் மரணித்தார் என்று உள்ளூர் வாசிகளும் தலித் சங்கங்களும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

  சீராலாவில் 3 நாட்களுக்கு முன்பு கிரண் என்ற இளைஞன் தன் நண்பன் ஆப்ரஹாம் ஷைன் என்பவரோடு சேர்ந்து பைக்கில் வெளியில் வந்தார். இரண்டு சக்கர வாகனத்தின் மீது சென்ற அவர்களளை எஸ்ஐ விஜயகுமார் நிறுத்தி ஏன் மாஸ்க் அணியவில்லை என்று கேட்டு ஆத்திரப்பட்டார். அதன்பின் என்ன நடந்ததோ… இளைஞன் நினைவு இழந்து கீழே விழுந்ததால் அந்த இளைஞனை சீராலா மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். நிலைமை மோசமானதால் அங்கிருந்து குண்டூரு அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உடல் நிலை தேறாததால் மேற்கொண்டு மருத்துவத்திற்காக ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சேர்த்தார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது புதன்கிழமை காலை இளைஞன் மரணம் அடைந்தார்.

  போலீஸார் லாட்டியால் அடித்தார்கள் என்றும் அந்த அடியின் காரணமாகவே இளைஞன் மரணித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். கிரணின் தந்தை மோகன்ராவு சீராலாவில் ரேஷன் டீலராக பணிபுரிந்து வருகிறார்.

  சீராலா எஸ்ஐ விஜயகுமார் அதிக உற்சாகம் காட்டி அடித்துக் கொன்றார் என்று தலித் சங்கங்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள். எஸ்ஐ விஜயகுமார் மீது கொலை , எஸ்சி எஸ்டி வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று டிமாண்ட் செய்து வருகிறார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »