ஏப்ரல் 21, 2021, 10:25 காலை புதன்கிழமை
More

  கொரோனான்னு தனிமை வார்டுல இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்! டாக்டர் கைது!

  மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் ஆராயப் பட்டது. அதில், பிபிஇ கிட் அணியாமல் மருத்துவர் அந்த தனிமை வார்டுக்குச் சென்றது தெரியவந்தது.

  aligarh-doctor-accused-of-raping-a-corona-positive-patient-in-isolation-ward
  aligarh-doctor-accused-of-raping-a-corona-positive-patient-in-isolation-ward

  அலிகாரில் உள்ள தீனதயாள் மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணிபுரியும் 30 வயது மருத்துவர் துஃபைல் அகமது, 25 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதான குற்றச்சாட்டில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

  வெளியான செய்திகளின்படி, கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்ட நோயாளியான அந்தப் பெண், தனிமைப்படுத்தும் வார்டில் இருந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.

  டாக்டர் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர் கைது செய்யப் பட்டார். அவர் ஹோட்டல் ஒன்றில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

  தில்லியில் பணிபுரியும் அந்தப் பெண் அலிகாருக்குச் சென்றபோது, அங்கு கொரோனா வைரஸ் அறிகுறிகளை எதிர்கொண்டார். இதை அடுத்து, திங்களன்று, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்! அங்கு அவர் சீன வைரஸ் குறித்து பரிசோதனை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு சீன வைரஸ் பாசிட்டிவ் என்று வந்திருந்தது.

  இந்நிலையில், டாக்டர் அகமது செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பெண்ணைப் பார்வையிட்டார்! அவரை பரிசோதிக்கும் சாக்குப்போக்கில் அவரது தனிப்பட்ட பகுதிகளைத் தொட்டு, சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

  இது குறித்த புகாரின் பேரில், மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் ஆராயப் பட்டது. அதில், பிபிஇ கிட் அணியாமல் மருத்துவர் அந்த தனிமை வார்டுக்குச் சென்றது தெரியவந்தது.

  டாக்டர் அகமது மீது ஐபிசியின் பிரிவு 376 (2) (ஈ) (அவரது உத்தியோகபூர்வ பதவியைப் பயன்படுத்தி, அவரது மருத்துவ கண்காணிப்பில் உள்ள ஒரு பெண் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க மாவட்ட சி.எம்.ஓ (தலைமை மருத்துவ அதிகாரி) ஒரு குழுவை அமைத்துள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »