ஏப்ரல் 21, 2021, 11:13 காலை புதன்கிழமை
More

  தென்காசி குமாரபாண்டியன் தந்தை சொர்ண தேவர்… இறையடி சேர்ந்தார்!

  இவரைப்போல நாமும் வாழ சபதம் ஏற்போம், அண்ணாரது ஆன்மா சாந்தியடைய நம் இஷ்ட தேவதையை ப்ரார்த்திப்போம்

  sornathevar_tenkasi
  sornathevar_tenkasi

  தென்காசி மாவட்டம் தென்காசி நகரில் இந்து முன்னணி முன்னாள் நகர தலைவர் தெய்வத்திரு குமார் பாண்டியன் தந்தை சொர்ணத் தேவர் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவுக்கு இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  சொர்ணத்தேவர்

  தென்காசி ஹிந்துக்களின் இதயக்குரல்…

  காசி விசுவநாதர் கோபுரத்தை காக்க துலுக்க பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு பலிதானிகள் ஆன குமார் பாண்டியன், சுரேஷ், சேகர், செந்தில் ஆகியோரின் தகப்பனார்…

  காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பொழுதிலிருந்து ஆலயத்திற்காக, ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்தவர்
  90 வயதை கடந்தும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்
  சிறுவயது முதலே காங்கிரஸ் ஊழியர்

  தென்காசியில் இவரது கடையின் டீ மற்றும் வடை மிக பிரபலம்
  திருச்செந்தூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு K.T.கோசலராமன் அவர்களின் செல்லப்பிள்ளை..
  தென்காசி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அருணாச்சலம் அவர்களின் நண்பர்..

  1972 (அ)1974 வருடத்தில் பெரிய லாலா கடை அருகேயுள்ள திடலை இசுலாமியர்கள் ஆக்கிரமித்து அங்கிருந்த விநாயகர் கோவிலுக்கு தீ வைத்து எரித்து போது ஓடோடி சென்று போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர்..

  அதன்பின் தென்காசியில் உள்ள கோமதி அம்மன் சன்னதியில் ஆடித்தபசு நடந்த பொழுது ஹிந்து வியாபாரிகளை தாக்கிய இசுலாமியர்களை கைது செய்ய சொல்லி குரல் கொடுத்தவர்..

  1985 காலகட்டத்தில் சட்டமன்ற வேட்பாளராக காங்கிரஸ் இவருக்கு சீட் கொடுத்த பொழுது இவர் அதை வாங்க மறுத்து வழக்கறிஞர் வெங்கட்ரமணன் அவர்களை சட்டமன்ற உறுப்பினராக நிறுத்தி வெற்றி பெற வைத்தவர்..

  அந்த நேரத்தில் இசுலாமியர்கள் சந்தனக்கூடு திருவிழா என்கின்ற பெயரில் ஊர்வலமாக வந்து சட்டமன்ற‌ உறுப்பினர் திரு வெங்கட்ரமணன் அவர்களின் இல்லத்தை தாக்கிய பொழுது தன் குடும்பத்துடன் வந்து சாலை மறியல் செய்து வழக்கு வாங்கியவர்்்

  தென்காசி காசி விசுவநாதர் திருவிழாவுக்கு இடையூறாக இருந்த இசுலாமியர்களை பகிரங்கமாக கண்டித்தவர்..

  2006 ல் இவரின் புதல்வர் இந்து முன்னணியின் நகர தலைவராக இருந்த திரு குமார் பாண்டியன் காசி விசுவநாதர் ஆலயத்திற்கு எதிர் உள்ள சுவாமி சன்னதியில் கட்டளை மடத்தை கையகப்படுத்தி மசூதியாக மாற்ற முயற்சித்த பொழுது அதை கண்டித்து போராட்டம் நடத்தினார்..

  அந்த போராட்டம் மூலமாக உலகத்திற்கு தெரிய வந்தது இசுலாமியர்களின் அராஜகம், இவரின் போராட்டத்தை கண்டு அஞ்சிய இசுலாமியர்கள் 2006 டிசம்பர் – 17 அன்று இரவு இவரை நடு ரோட்டில் வைத்து கொலை செய்தனர்..

  அதை கண்டு கலங்காத சொர்ணத்தேவர் காசி விசுவநாதனுக்காக என் மகனை இழந்தேன், ஆனால் கோபுரத்தை ஒரு பொழுதும் இழக்க விட மாட்டேன் என முழங்கினார்..

  அந்த நேரத்தில் மிகப்பெரிய அளவில் ஹிந்து எழுச்சி ஏற்பட்டு இந்து முன்னணி நிறுவனர் ஐயா இராம கோபாலன் அவர்கள் திரு குமார் பாண்டியன் இல்லத்திற்கு ஆறுதல் கூற வருகை தந்தார்.

  அந்த நேரத்தில் இந்து முன்னணி கொடி அங்கு ஏற்ற கம்பம் நடப்பட்டிருந்தது, அங்கு வந்த கோபால் ஜி கொடியை சொர்ணத்தேவரை விட்டு ஏற்றச்சொன்ன பொழுது நான் காங்கிரஸ்காரன் நான் எப்படி ஏற்றுவேன் என கூறினார் சொர்ணத்தேவர்..

  உடனே கோபால் ஜி கொடி ஏற்ற ஹிந்து சிந்தனை இருந்தால் போதும் என கூறிய உடனே நான் இன்றிலிருந்து காங்கிரஸ்காரன் இல்லை தன் தோளில் இருந்த துண்டை உதறி விட்டு காவித்துண்டை போட்டு கொடி ஏற்றியவர்

  அடுத்த வருடம் 2007 ஆண்டு சொர்ணத்தேவரின் மூன்று மகன்களான திரு செந்தில், திரு சுரேஷ், திரு சேகர் அவர்களை இசுலாமிய பயங்கரவாத கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்

  அப்பொழுதும் கலங்காத சொர்ணத்தேவர் என் குடும்பமே போனாலும் என் ஆலயத்தை இழக்கேன் என சபதம் எடுத்து கடைசி வரை ஹிந்துக்களுக்காகவே வாழ்ந்தவர்

  இன்று அந்த காசி விசுவநாதனிடமே சென்று விட்டார்,

  அவர் பெற்றெடுத்த நான்கு மகன்களை ஹிந்து சமுதாயத்தை காக்க பழி கொடுத்த பின்னும் கலங்காத நெஞ்சம் உடையவர்

  இவரைப்போல நாமும் வாழ சபதம் ஏற்போம், அண்ணாரது ஆன்மா சாந்தியடைய நம் இஷ்ட தேவதையை ப்ரார்த்திப்போம்

  வாழ்க_சொர்ணத்தேவர்

  • பா.சரவணகார்த்திக் (விசுவ ஹிந்து பரிஷத்)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »