ஏப்ரல் 21, 2021, 11:22 காலை புதன்கிழமை
More

  சாஃப்ட்வேர் வேலை போனால் என்ன? காய்கறி வித்தாவது பெற்றோரைக் காப்பேன்! களத்தில் இறங்கிய சாரதா!

  சாப்ட்வேர் வேலை போனாலென்ன? காய்கறி விற்று குடும்பத்திற்கு துணையாக இருப்பேன் என்று உறுதிபூண்டார் வீராங்கனை சாரதா.

  vegetable-seller-saradha1-1
  vegetable-seller-saradha1-1

  ‘சாஃப்ட்வேர் சாரதா’ வீடியோ வைரல்.

  ஏழ்மை. குடும்பம் நடப்பதே கடினம். அதிலும் கொரோனா சூழல். செய்து வந்த சாப்ட்வேர் வேலையும் போயிற்று. பெற்றோருக்கு துணையாக இருந்து வருகிறோம் என்ற மகிழ்ச்சியும் ஆவியாகிப் போனது. அதோடுகூட பொருளாதாரத் தொல்லைகள். ஆனால் இவை எவையும் ஒரு ஏழைப் பெண்ணை சிறிதுகூட கலவரப் படுத்தவில்லை.

  இந்த கொரோனா காலத்தில் வந்த சிரமங்களால் விழுந்து விடவில்லை. சாப்ட்வேர் வேலை போனாலென்ன? காய்கறி விற்று குடும்பத்திற்கு துணையாக இருப்பேன் என்று உறுதிபூண்டார் வீராங்கனை சாரதா.

  சாஃப்ட்வேர் வேலையே போனாலும் துளியும் பின்வாங்காமல் தன்னம்பிக்கையோடு குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு காய்கறிகள் விற்றுவரும் ஒரு இளம்பெண் பலருக்கும் ஆதர்சமாக நின்றுள்ளார். காய்கறி விற்பதற்காக துளியும் சங்கோஜமாக வெட்கப்படவில்லை என்று கூறியுள்ளார் இந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.

  தலைநகர் டெல்லியில் இரண்டு ஆண்டுகள் சாப்ட்வேர் ஊழியராக பணி புரிந்த சாரதா அண்மையில் ஹைதராபாத்தில் புது வேலையில் சேர்ந்தார். நல்ல சம்பளத்தோடு முதல் மூன்று மாதங்கள் ட்ரெய்னிங் பூர்த்தி செய்த அவரை கொரோனா சூழல் பின்தொடர்ந்தது.

  லாக்டௌன் விதித்ததால் கம்பெனி நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. அதற்காக எந்தவிதமான மன அழுத்தத்திற்கும் ஆளாகாமல் பெற்றோருக்கு துணையாக காய்கறி வியாபாரத்தை தொடங்கினார். வேலை போனதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொள்கின்ற பலருக்கும் ஆதர்சமாக நின்றுள்ளார் இந்த இளம் சாப்ட்வேர் ஊழியர்.

  vegetable-seller-saradha2-1
  vegetable-seller-saradha2-1

  சோஷல் மீடியாவில் வைரலாக மாறிய அவருடைய வீடியோ பேச்சுக்கள் பல பிரமுகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பலரும் இப்பெண்ணை புகழ் மழையில் மூழ்க வைத்துள்ளார்கள்.

  நாட்டில் நாளுக்கு நாள் வேலையற்றோர் எண்ணிக்கை பெருகிவருகிறது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்படும் லாக்டௌனால் தினக் கூலி தொழிலாளர்கள் வேலை இழந்து வருகிறார்கள். பலவித துறைகளில் பலர் வேலையை இழந்துள்ளார்கள்.

  கொரோனா வைரஸ் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக தீவிரமாக நஷ்டமும் விளைவித்துள்ளது. முக்கியமாக ஊரடங்கு விதித்த நாளிலிலிருந்து நாட்டில் ஏழை, சாமானிய மக்கள் திக்கில்லாமல் வீதியில் அலைகிறார்கள். அதுவரை ஏதோ ஒரு கூலி வேலை செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் வீதியில் அலைய தொடங்கினார்கள். ஊரடங்கு வளர்ந்து கொண்டே இருந்த சூழலில் மேலும் மேலும் வேலையிழப்புகள் அதிகமாயின.

  vegetable-seller-saradha3-1
  vegetable-seller-saradha3-1

  இப்போது நாட்டில் 12.2 கோடி பேர் வேலை இழந்தவர்கள் என்று தற்போதைய கணக்கு தெரிவிக்கிறது. நாட்டில் வேலையற்றோர் எண்ணிக்கை 27.1 சதவீதத்தை எட்டியுள்ளது என்று தெரிகிறது.

  இதோ அந்த பெண் பேசும் வைரல் வீடியோ.

  வாரங்கலைச் சேர்ந்த ‘சாஃப்ட்வேர் சாரதா’ காய்கறி விற்று வரும் வீடியோ வைரலாகி வந்ததை தொடர்ந்து பல பிரமுகர்களின் பார்வையை ஈர்த்தது. தற்போது ஏழைப்பங்காளனாக அவதாரம் எடுத்து ரியல் ஹீரோவாக புகழப்பெறும் நடிகர் சோனுசூட் அந்த இளம்பெண்ணுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் உதவி செய்வதாகவும் முன்வந்துள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »