ஏப்ரல் 21, 2021, 11:04 காலை புதன்கிழமை
More

  கட்டிலில் இருந்து கீழே விழுந்து… ஆக்சிஜன் இன்றி துடிதுடித்து இறந்த நோயாளி!

  மருத்துவமனையின் சூழ்நிலை இவ்வளவு அவலமானதாக இருக்கிறது என்று சக நோயாளிகள் வருத்தமும் கவலையும் தெரிவித்தனர்.

  patient-falls-from-bed-leads-to-death
  patient-falls-from-bed-leads-to-death
  • மருத்துவமனை கட்டிலிலிருந்து கீழே விழுந்த கொரோனா நோயாளி.
  • ஆக்சிஜன் இன்றி தெலங்காணா கரீம்நகரில் துடிதுடித்து இறந்த காட்சி.

  கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்த விஷயத்தை மருத்துவ ஊழியருக்கு தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  முழுமையான மருத்துவ அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்தது என்று அதே வார்டில் உள்ள பிறர் குற்றம்சாட்டியுள்ளனர்.

  கரீம்நகர் அரசாங்க மருத்துவமனையில் கொரோனா வார்டில் கோர சம்பவம் நிகழ்ந்தது. மிகமிக கண்டிக்கத்தக்க அலட்சியமான சூழல் நிலவுகிறது. அலட்சியமான, அவலமான சூழலின் இடையில் ஒரு கொரோனா நோயாளி மரணம் அடைந்தார்.

  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் நினைவின்றி கட்டிலிலிருந்து கீழே விழுந்து இறந்து போனார். கட்டிலிலிருந்து கீழே விழுந்ததால் அவருக்கு அளிக்கப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை நின்று போய் விட்டதாக தெரிகிறது.

  ஆனால் கீழே விழுந்து ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் 45 நிமிஷங்கள் துடித்தாலும் ஊழியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று அதே வார்டிலுள்ள ஒரு நோயாளி போன் மூலம் பிறருக்கு செய்தி தெரிவித்தார். அதோடு கூட அது தொடர்பான போட்டோக்களை எடுத்து வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பினார்.

  நோயாளி கட்டில் மீது இருந்து கீழே விழுந்த செய்தியை மருத்துவ ஊழியருக்கு சொன்னாலும் யாருமே அதை பொருட்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முழுமையான மருத்துவ அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நேர்ந்தது என்று அதே வார்டில் உள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  நோயாளி கீழே விழுந்த சற்று நேரத்தில் துடிதுடித்து இறந்து போன பின்பு ஊழியர் வந்து இறந்த உடலை கட்டில் மேலே ஏற்றி படுக்கவைத்து அப்போது ஆக்சிஜனும் வைத்தார்கள் என்று கூறுகிறார்கள். மருத்துவமனையின் சூழ்நிலை இவ்வளவு அவலமானதாக இருக்கிறது என்று சக நோயாளிகள் வருத்தமும் கவலையும் தெரிவித்தனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »