ஏப்ரல் 23, 2021, 6:46 காலை வெள்ளிக்கிழமை
More

  கொரோனா மரணம்; கோர்ட்டுக்கு போனதால்… ரூ.6 லட்சம் பில் தள்ளுபடி செய்த தனியார் மருத்துவமனை!

  ஹை கோர்ட் விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்பே மருத்துவமனை 6.4 லட்சம் ரூபாய்கான பில்லை ரத்து செய்து

  hyderabad hospital - 3
  • கோர்ட்டுக்கு சென்ற கொரோனா மரணமடைந்தவரின் மனைவி.
  • ஹைதராபாதில் பெயர்பெற்ற பிரைவேட் மருத்துவமனை 6 லட்ச ரூபாய் பில்லை ரத்து செய்தது.

  ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் மரணித்ததால் அப்போது வரை அளித்த மருத்துவ சிகிச்சைகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் 10 லட்சம் ரூபாய் பில் போட்டது.

  தற்போது கொரோனா தொற்றின் தீவிர சூழலை சில கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேஷ் செய்து கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுகிறது. கோவிட் சிகிச்சைக்கு பிரைவேட் மருத்துவமனையிலும் அனுமதிக்கலாம் என்று கூறிய நாள் முதல் அது தொடர்பான சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து வருகின்றன.

  பிரைவேட் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் கொள்ளை யடிப்பதற்கு முன்வந்துள்ளன. பல லட்சங்களில் பில் கேட்கப்படுவதால் பல நோயாளிகள் செல்பி வீடியோக்களை எடுத்து சோஷல் மீடியாவில் பதிவு செய்து வருகிறார்கள். இதனால் அரசாங்கம் தீர்மானித்த சார்ஜ்களுக்கு பல மடங்கு அதிகம் பிரைவேட் மருத்துவமனைகள் வசூல் செய்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

  இந்த விதத்தில் கோவிட் நோயாளி ஒருவர் மரணம் அடைந்தால் உடலைக் கொடுப்பதற்கு மீதி பில்லையும் மொத்தமாக கட்டினால் தான் தருவோம் என்று முடிவாக தெரிவித்து விடுகின்றனர்.

  ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனை கூட இதே போல் செய்தது. வேறு வழியின்றி கொரோனாவால் மரணமடைந்தவரின் மனைவி ஹைகோர்ட் உதவியை நாடினார். அதனால் மருத்துவமனை நிர்வாகம் இறங்கி வந்தது. ஒரேயடியாக 6.4 லட்சம் ரூபாய் பில்லை ரத்து செய்தது.

  விவரங்கள் இவை… அண்மையில் ஒருவர் கொரோனா பாதிப்போடு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மரணித்தார். அதுவரை அளித்த வைத்திய சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் 10 லட்சம் வரை பில் போட்டது. இறந்தவரின் குடும்ப அங்கத்தினர்கள் ஓரளவிற்கு பணம் கட்டினார்கள்.

  ஹைதராபாதில் தனது கணவரின் உடலைத் தர மறுத்ததற்காக கோவிட் -19 பாதிக்கப்பட்டவரின் மனைவி தெலங்காணா உயர்நீதிமன்றத்தில் கான்டினென்டல் மருத்துவமனை, நானக்ரம்குடாவுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்தார். ஒரு நாள் கழித்து தனியார் மருத்துவமனை ரூ. 6,41,175.63 நிலுவையில் உள்ள பில்லை தள்ளிவிட்டு ஜூலை 24 அன்று உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது.

  பாதிக்கப்பட்டவரின் சகோதரர் வெங்கடசாமி கொண்டா புரம், ஊடகத்தாரிடம் கூறுகையில் “மருத்துவமனை ஊழியர்கள் வெள்ளிக்கிழமை என்னை அழைத்து உடலை ஒப்படைத்தனர். நிர்வாகம் ஆரம்பத்தில் குடும்பத்தினரிடம் ரூ .10 லட்சம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது, இருப்பினும் நாங்கள் நீதி மன்றத்தை அணுகியதால் எங்கள் பிரச்சினைகளைக் கேட்டு அவர்கள் ரூ .6.4 லட்சம் கட்டணத்தை தள்ளுபடி செய்தனர் ”.

  அதிக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் கொண்டாபுரம் மோகன் பாபு ஜூலை 17 அன்று கான்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகள் கோவிட் பாசிடிவ் என்று காட்டின. அப்போதிருந்து, டாக்டர்கள் அவருக்கு கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஜூலை 22 அன்று, அந்த நபர் வைரஸால் இறந்தார். இருப்பினும் குடும்பத்தால் ரூ .6.41 லட்சம் நிலுவையில் உள்ள பில்லை அளிக்க முடியவில்லை.

  “நான் தினசரி கூலித் தொழிலாளி. என் கணவர் ஹைதராபாத்தின் மோஸ்பேட்டில் உள்ள லக்ஷ்மிகலா சசிகலா தியேட்டரில் வாச்மேனாக பணிபுரிந்தார். கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து திரைப்பட தியேட்டர்கள் மூடப்பட்ட பிறகு என் கணவருக்கு வேலை இல்லை. எந்த வருமானமும் இல்லாததால் எங்களால் முடிவெடுக்க முடியவில்லை ” என்றார் இறந்தவரின் மனைவி லாவண்யா.

  hyderabad hospital1 - 4

  முதலில் அவர் ரூ. 2,50,000 கடன்வாங்கி மருத்துவமனை கட்டணத்தை செலுத்தினார். ஆனால் ஜூலை 22 அன்று, அவர்கள் லாவண்யாவிடம் மொத்த பில் ரூ. 8,91,175.63 கட்டும்படி கூறினர். மருத்துவமனை அதிகாரிகள் லாவண்யாவை மீதமுள்ள ரூ. 6,41,175.63 செலுத்திய பின்னர் கணவரின் உடலை எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.

  நோயாளி மரணித்த பின் மீதி உள்ள ரூ 6.4 லட்சத்தையும் கட்டினால்தான் உடலைத் தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் தீர்மானமாக கூறி விட்டது. அதனால் வேறு வழியில்லாத நிலையில் அந்த பெண்மணி ஹைகோர்ட்டில் ரிட் பெடிஷன் தாக்கல் செய்தார்.

  ஹை கோர்ட் விசாரணைக்கு சில மணி நேரங்கள் முன்பே மருத்துவமனை 6.4 லட்சம் ரூபாய்கான பில்லை ரத்து செய்து உடலை குடும்பத்தாருக்கு அளித்து விட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »