ஏப்ரல் 21, 2021, 10:56 காலை புதன்கிழமை
More

  திருப்பதி பெருமாளை தரிசிக்க… ரஷ்யப் பெண்ணுக்கு உதவிய சோனுசூட்!

  எஸ்தரின் கஷ்டங்கள் தெரியவந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவ முன்வந்தார்.

  tirupati darshan russian lady - 1

  திருமலை பெருமாள் தரிசனம் செய்து கொண்ட ரஷ்யப் பெண். சோனுசூட் உதவி.

  எஸ்தர் படும் கஷ்டங்களைப் பற்றி தெரிய வந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவிக்கு முன்வந்தார். எப்படிப்பட்ட உதவி ஆனாலும் தான் செய்வதற்கு தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

  துணை ஜனாதிபதியின் மகள், சுவர்ணபாரதி டிரஸ்ட் சேர்மன் தீபா வெங்கட் உதவிக்கு முன்வந்து உடனே அவருக்கு ஆதரவாக நின்றுள்ளார். ரஷ்யன் தாயுடனும் மகளுடனும் அவர் உரையாடினார்.

  ஆன்மீக யாத்திரை வந்த ரஷ்ய யுவதி எஸ்தர் திருப்பதியில் சிக்கிக்கொண்ட விஷயம் தெரிந்ததே. மீடியாவில் வந்த விவரங்களால் அவருக்கு உதவி செய்வதற்கு பலர் முன் வந்துள்ளார்கள்.

  russian lady - 2

  எது எப்படியாயினும் ரஷ்யா யுவதி இறுதியில் திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசித்துக் கொண்டார். எஸ்தர் பற்றி தெரிய வந்ததால் டிடிடி சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி பிரதிநிதிகளை ரஷியன் யுவதியிடம் அனுப்பினார். ஸ்ரீவாரி தரிசனம் கொள்வதற்கு அவகாசம் ஏற்படுத்தினார். அவர் வியாழக்கிழமை ஸ்ரீவாரி சேவையில் பங்கு கொண்டார். தன் விருப்பம் நிறைவேறியது. ஸ்ரீவாரி தரிசனம் கிடைத்ததில் ஆனந்தமாக உள்ளது என்றார். தன் கஷ்டங்கள் பற்றி அறிந்து உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  எஸ்தரின் கஷ்டங்கள் தெரியவந்ததால் திரைப்பட நடிகர் சோனுசூட் கூட உதவ முன்வந்தார். எப்படிப்பட்ட உதவி செய்வதற்கும் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.

  ஆன்மீக யாத்திரைக்கு இந்தியா வந்து இங்கே சிக்கிக்கொண்டு யுவதி படும் கஷ்டங்களை அறிந்த ஒரு வழக்கறிஞர் குடும்பம் எஸ்தரை ஆதரித்து அவருக்கு தம் வீட்டிலேயே தங்கும் வசதியும் உணவு வசதியும் அளித்துள்ளார்கள்.

  russian lady 1 - 3

  அதேபோல் எம்எல்ஏ பூமன கருணாகர ரெட்டி கூட அவருக்கு பண உதவி செய்தார். அதுமட்டுமின்றி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் சுவர்ணபாரதி டிரஸ்ட் சேர்மன் தீபா வெங்கட் உடனே அவருக்கு உதவிக்கு வந்து துணையாக நின்று உள்ளார். தாயோடும் மகளோடும் அவர் உரையாடினார்.

  ரஷ்யன் -தெலுங்கு, ரஷ்யன் -இந்தி பேசக் கூடிய துபாஷிகளை அவர்களிடம் அனுப்பிவைத்தார். பிருந்தாவனத்தில் சிக்கிக்கொண்ட ஒலிவியாவை திருப்பதிக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »