Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் கோமதி அம்மன் ஆடித் தபசுக் காட்சி!

கோமதி அம்மன் ஆடித் தபசுக் காட்சி!

sankarankoil adi thapasu

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழா கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் திருக்காட்சி .

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்திபெற்ற
சங்கரநாரயண சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இக்கோவிலில் ஆடித்தவசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . ஆடித் திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்த ஆடித்தவசு திருவிழா இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவில் கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய திருநாளான இன்று ஆடித் தபசு காட்சி நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் சங்கரலிங்க சுவாமி,
சங்கரநாராயணசுவாமி, கோமதி அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கும்ப பூஜை நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version