27/09/2020 7:24 PM

ரக்ஷாபந்தன்; ராணுவ வீரர்களுக்கு கரூர் ஆசிரியர்கள் அனுப்பிய 13 ஆயிரம் ‘ராக்கி’கள்!

இது வரை ஒரு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரம் ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளோம்

சற்றுமுன்...

பிரதமர் மோடியின் மனதின் குரல்! கதைகள் வாயிலான கலாசாரம்!

தனிநபர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மேலும் நெருக்கத்தை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

இந்த அறிகுறிகள் இருந்தா… உடனடியா மருத்துவ மனையை அணுகுங்க: தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்!

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனையை அணுக வேண்டும்

எஸ்பிபி.,யா? எஸ்ஆர்பி.,யா? கூட்டுறவுத் துறை உளறலை வனத்துறை சரி செய்ய… அதிர்ந்த செய்தியாளர்கள்!

மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல்

வெள்ளத்தில் மூழ்கிய தேவகோட்டை பத்திர பதிவு அலுவலகம்!

தண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியும்.
karur rokie 6

ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு கரூர் ஆசிரியர்கள் 13 ஆயிரம் ராக்கி கயிறுகளை அனுப்பி வைத்தனர்.

ரக்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு இந்திய எல்லையில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு கரூர் பரணி பார்க்க கல்வி குழும சாரண ஆசிரியர்கள் இக்கட்டான கொரொனா சூழ்நிலையிலும் 13000 ராக்கிகளை தயார் செய்து தேசபக்தியோடு அனுப்பியது பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரின் அமோக வரவேற்பு மற்றும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.

karur rokie a


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தனது ‘ராக்கீஸ் பார் சோல்ஜர்ஸ்’ அமைப்பின் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ராக்கி கயிறுகளை சேகரித்து எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமையகம் மூலமாக அனுப்பி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நிகழாண்டில், கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர். சொ. ராமசுப்பிரமணியன் தலைமையில் பரணி பார்க் கல்வி குழுமத்தின் சாரணர் தன்னார்வ ஆசிரியர்கள் 90 பேர் இணைந்து 13000 ராக்கிகளை தயார் செய்து ‘ராக்கீஸ் பார் சோல்ஜர்ஸ்’ அமைப்பின் மூலமாக ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

karur rokie 2

இது குறித்து கேட்ட போது நம்மிடம் பேசிய முனைவர். சொ. ராமசுப்பிரமணியன், “பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் வழிகாட்டுதலில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் குழும மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆயிரக்கணக்கான ராக்கி கயிறுகளை தேசபக்தியோடு தயாரித்து இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வருகிறோம். இந்த ஆண்டு கொரொனா சூழ்நிலையால் மாணவர்கள் ராக்கி தயாரிப்பில் ஈடுபடவில்லை.

karur rokie

எல்லையில் நாம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் கொரொனாவோடு மட்டுமல்லாமல் நம் நாட்டின் எதிரிகளோடும் போராடி நம் நாட்டை பாதுகாத்து வருகிறார்கள் . எனவே தன்னார்வ சாரணர் ஆசிரியர்கள் 90 பேர் ஒன்று சேர்ந்து அவரவர் வீடுகளில் ராக்கி கயிறு தயார் செய்து 13000 ராக்கிகளை சேகரித்தோம். அவற்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் மூலமாக நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளுடன் சேர்த்து புது தில்லியில் ராணுவ அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நாட்டின் பல்வேறு எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ரக்ஷா பந்தன் தினத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

திருக்குறள் ராக்கி: இந்த ஆண்டு லடாக் எல்லையில் அண்மையில் நமது ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாடிய பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தியதைக் கொண்டாடும் விதமாக புது முயற்சியாக திருக்குறள் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திருக்குறள் ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களின் வெற்றிப்படங்களுடன் தயாரித்து அனுப்பினோம்.

பசுமை விதை ராக்கி: மேலும் இயற்கை அன்னையைப் பாதுகாக்கும் விதமாக பசுமை விதைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான பசுமை ராக்கி கயிறுகளையும் தயாரித்து அனுப்பினோம்.

karur rokie 1

ராணுவ வீரர்களுக்கு ஆசிரியர் சமூகம் சார்பாக அன்பையும் வணக்கத்தையும் தெரிவிவிக்கும் அற்புதமான நிகழ்வு இது. இந்த நான்கு ஆண்டுகளில் இது வரை ஒரு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரம் ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளோம். “ என்று ராமசுப்பிரமணியன் கூறினார்.

இக்கட்டான கொரொனா சூழ்நிலையிலும் 13000 ராக்கிகளை தயார் செய்து தேசபக்தியோடு ராணுவ வீரர்களுக்கு அனுப்பிய கரூர் பரணி பார்க்க கல்வி குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்களை ‘ராக்கீஸ் பார் சோல்ஜர்ஸ்’ அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ். மோகன ரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் பெற்றோர், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

ஈவேரா., முன்னிலையில்… ஜெயகாந்தனின் ‘தைரிய’ உரை வீச்சு!

நாம் காட்டுமிராண்டிகளானது இந்த இரு நூற்றாண்டுக் கால அடிமை வாழ்க்கையில்தான். அதற்கு முன்னால் சுரண்டலற்ற, வர்க்க மோதல்கள் இல்லாத

சமையல் புதிது.. :

சினிமா...

சோகமான ஆச்சரியம்! மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,!

ஜூன் மாதமே சிலைக்கு ஆர்டர்.. மரணத்தை முன்கூட்டியே கணித்த எஸ்பிபி..? Source: Vellithirai News

எஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவை அடுத்து, அவருக்காக திருவண்ணாமலை ரமணர் சந்நிதியில் மோட்ச தீபம் ஏற்றினார் இசையமைப்பாளர் இளையராஜா.  Source: Vellithirai News

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...

Translate »