ஏப்ரல் 22, 2021, 6:34 மணி வியாழக்கிழமை
More

  நடுரோட்டில் ரத்தம்… பிரகாசம் மாவட்டத்தில் பில்லி சூனிய பூஜைகள் … பரபரப்பு!

  இப்போதுகூட பூத வைத்தியம், க்ஷுத்ர பூஜை, செய்வினை என்று அடாவடி செய்து வருகிறார்கள்.

  IMG 20200806 WA0017 - 1

  நட்ட நடு நள்ளிரவில் பலரும் நடமாடும் நடுரோட்டில் சிலர் க்ஷுத்ர பூஜைகள் செய்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அதனால் அவர்கள் உடனடியாக போலிசாருக்கு புகார் அளித்தனர்.

  ஒரு புறம் உலகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வகையில் சிலர் மட்டும் இன்னும் மூடநம்பிக்கைகளின் முக்காடு போட்டு அதில் மூழ்கி இருக்கிறார்கள்.

  இப்போதுகூட பூத வைத்தியம், க்ஷுத்ர பூஜை, செய்வினை என்று அடாவடி செய்து வருகிறார்கள்.

  அண்மையில் ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் க்ஷுத்ர பூஜைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  நட்டநடு நள்ளிரவில் மெயின்ரோடு மேலே மஞ்சள் குங்குமம் ரத்தம் சிவப்பு மிளகாய்கள் கோழி முட்டைகள் போன்றவற்றை அடையாளம் தெரியாதவர்கள் வைத்து பூஜை செய்துள்ளார்கள். நடு ரோடு மீது பாதி ராத்திரியில் நான்கு புறமும் அன்ன உருண்டைகளை வைத்து பூஜைகள் செய்தததால் உள்ளூர்வாசிகள் பயத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள்.

  ஒருபுறம் கொரோனா தொற்று வளர்ந்து வருகையில் நோய் சுற்றுப்புறத்தில் அதிகமாக பரவி வருவதாக அந்த இடத்தையே கன்டோன்மென்ட்டாக அறிவித்தார்கள். இதனால் அந்தந்த ரோடுகளை மூடி விட்டார்கள் அதிகாரிகள்.

  இதனால் மெயின் ரோடு மேலிருந்து போகவேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் யாரோ க்ஷுத்ர பூஜைகள் செய்து இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகிக்கிறார்கள்.

  இந்த சம்பவத்தின் மீது உடனடியாக போலிசாருக்கு செய்தி தெயிவித்தார்கள்.

  களத்தில் இறங்கிய போலீசார் பூஜை செய்தது யார் என்ற விசாரித்து வருகிறார்கள்.
  மெயின் ரோடுக்கு அருகில் வசிப்பவர்களை விசாரித்து வருகிறார்கள்.

  அண்மையில் ஆந்திராவில் பல இடங்களில் க்ஷுத்ர பூஜைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நெல்லூர் மாவட்டத்தில் கூட பலர் க்ஷுத்ர பூஜை செய்தார்கள் என்று அங்குள்ளவர்கள் பயம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்கள்.

  உதய கிரியில் காவலி ஈரோடு அருகில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சில அடையாளம் தெரியாத மனிதர்கள் க்ஷுத்ர பூஜை நடத்தினார்கள். நள்ளிரவில் பெண்ணுருவில் கோலங்கள் இட்டு அதன் நடுவில் ஒரு பெண்ணின் போட்டோவை வைத்து க்ஷுத்திர பூசைகள் செய்ததாக உள்ளூர்வாசிகள் புகார் அளித்தனர். மஞ்சள் குங்குமம் பரங்கிக்காய் தேங்காய் சாம்பிராணி கற்பூரம் இவை அனைத்தும் அங்கு பயன்படுத்தியுள்ளதாக சிதறிக்கிடந்தன.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »