ஏப்ரல் 21, 2021, 7:01 மணி புதன்கிழமை
More

  ‘டிவிட்டர் ஓர் இந்திய விரோதி’: ராமர் கோவில் வீடியோவை நீக்கிய காரணம் என்ன?!

  தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் இயங்குதளங்கள் செயலிகளை இந்தியா தடை செய்ய வேண்டும்!

  twitter
  twitter

  டிவிட்டர் தளம் தான் ஓர் இந்திய மற்றும் இந்து விரோத சமூகத் தளம்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

  இஸ்லாமிய குழுவினரால் தாக்குதல் கோஷங்களுடன் இந்துக்களுக்கு எதிரான போராட்டப் புகைப்படத்தை எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல் அனுமதிக்கும்போது, ​​அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயில் “முக்கிய உணர்வுபூர்வ உள்ளடக்கம்” என்று காரணம் கூறி, அதுகுறித்த வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது.

  அமெரிக்காவின் ராம ஜன்ம பூமி ஷிலா ந்யாஸ் கொண்டாட்டக் குழுவின் தலைவரான ஜகதீஷ் செஹானி, நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பக்தர்கள் கூடியதற்கான ஒன்பது விநாடி கொண்ட ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.

  “எங்கள் ராம் மந்திர் மற்றும் ராமபிரானை இன்று டைம்ஸ் சதுக்கத்தில் பார்த்ததில் நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன். இந்த ஓர் இரவு நம் வாழ்வில் அற்புதமானது, இன்று இரவு 7.30 மணிக்கு கொண்டாடுவோம்” என்று அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்தார்.

  ஆனால், இஸ்லாமிய குழுக்கள் மற்றும் சிலரின் எதிர்ப்பைத் தொடர்ந்து புதன்கிழமை காலை சில மணி நேரம் காட்டப்பட்ட பின்னர் டைம்ஸ் சதுக்க வீடியோ காட்சி டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது.

  அதே நேரம், புதன்கிழமை டைம்ஸ் சதுக்கத்தில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சிலின் ட்வீட்டை, எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் ட்விட்டர் தளம் அனுமதித்தது.

  ராமர் பிறந்த அயோத்தியில் அமைய உள்ள கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதற்காக டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்திற்கு எதிராக இஸ்லாமி குழுக்களின் எதிர்ப்பு இருந்தது.

  டிவிட்டர் குறித்து வெகு காலமாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டு வருகிறது. அது, லிபரல் மற்றும் இடதுசாரிகளுக்கு சாதகமான கருத்தியல் தளத்தில் இயங்குவதாகவும், இரட்டை நிலைப்பாட்டில் இயங்குவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது, டிவிட்டர் தளம், தேசியவாதிகள் மற்றும் வலதுசாரிகளுக்கு பாதகமான வகையில் ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு, கருத்துகளை தணிக்கை செய்கிறது.

  ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, 2018 ல் இந்தியாவுக்கு வந்தபோது, Smash Brahminical patriarchy ​​” பிராமணிய ஆதிக்கத்தை நொறுக்குவோம்” என்ற நெருப்பைக் கக்கும் இனவாத செய்தியுடன் ஒரு போஸ்டரை முன்வைத்தார்.

  இயல்பிலேயே இனவாதத்தையும், கருத்தியல் முடக்கத்தையும் முன்வைக்கும் டிவிட்டர் தளம் தன்னை ஒரு ஜனநாயக தளம் என்ற கோசத்தை முன்வைப்பது முழுக்க முழுக்க மக்களையும் டிவிட்டர் பயனர்களையும் ஏமாற்றும் செயல் தானே அன்றி வேறல்ல!

  இந்தியா தனக்கான சமூகத் தள செயலிகளை உருவாக்க வேண்டும். சீனா செய்தால் நியாயம், இந்தியா செய்தால் அநியாயம் என்ற இடதுசாரி உலகியல் பிரசாரத் தளத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் இயங்குதளங்கள் செயலிகளை இந்தியா தடை செய்ய வேண்டும்!

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »