ஏப்ரல் 22, 2021, 7:14 மணி வியாழக்கிழமை
More

  குருவின் அவசியம் பற்றி.. ஆச்சார்யாள்!

  IMG 20200717 163323 354 - 1

  ஒருவன் தன்னிடம் உள்ள வைரத்தின் மதிப்பை அளப்பதற்காக வழக்கமாக செல்லும் நகைக் கடைக்கு சென்றார். அங்கிருந்த வைர வியாபாரியிடம் வைரத்தை கொடுத்து தரத்தை மதிப்பிட சொன்னான். வைரத்தில் ஒரு வித தோஷமும் இல்லை என்றும் அதன் மதிப்பு பல லட்சங்களை பெறும் என்றும் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்‌

  வைர வியாபாரி அதை வாங்கி எல்லா பக்கங்களிலும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டே வந்தான். இது நல்ல வைரம் வைரம் இல்லை இதில் ஒரு கரும்புள்ளி இருப்பதால் இது தோஷம் உடைய வைரம் அதனால் இது அதிக விலை போகாதே என்று கூறினான்.

  வாடிக்கையாளர் அந்த வைரத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு சுழற்றி சுழற்றி பார்த்தான் அந்த கரும் புள்ளியை கண்டுப்பிடிக்க இயலவில்லை. அதன்பின் வியாபாரி எந்த கோணத்தில் வைரத்தை பிடித்துப் பார்த்தால் அந்த கரும் புள்ளிகள் ஏற்படும் என்பதை அவனுக்கு தெளிவாக விளக்கி நான் பல தடவை அந்த கரும் புள்ளியை வியாபாரி காட்டிய பிறகே வாடிக்கையாளர் கண்டுபிடிக்க முடிந்தது‌.

  வைரத்தின் தருணத்தை நினைப்பதைப் போன்று மிகச் சாதாரணமான விஷயத்தை நமக்கு ஒருவர் அருகில் இருந்து வழிகாட்டி சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது சூட்சுமமான பர பிரம்ம தத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு வழி காட்டுதல் என்பது இன்றியமையாதது. அதி சூட்சுமமான அதைக்காட்டிலும் சூட்சுமமாக ஆத்மா இருப்பதால் அது வாதங்களுக்கு அப்பாற்பட்டதாக விளங்குகிறது என்று கடோபநிஷத் ஆத்மாவைப் பற்றி கூறியுள்ளது.

  ஆத்ம தத்துவத்தை எடுக்கும் உபநிஷத்துக்களை ஒருவன் தானாகவே படிக்கவும் செய்யலாம். பிறகு அக்கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து சாத்திரங்கள் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்ளவும் பிரயத்தனம் செய்யலாம். ஆனால் நேரடியாக பிரம்மானுபவம் ஏற்பட்டு மோட்ச நிலையை அடைவதற்கு இவை மட்டும் இருந்தால் போதாது குருவின் கருணையும் அவருடைய புத்திமதிகள் முக்கியமானது.

  குருவின் இடத்திலிருந்து பெரும் உபதேசம் தான் ஒருவனுக்கு ஞானத்தை உண்டு பண்ண மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சாந்தோக்ய உபநிஷத்தில் தெளிவுபட குறித்து கூறப்பட்டுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »