ஏப்ரல் 21, 2021, 3:40 மணி புதன்கிழமை
More

  சஷ்டி கவச விவகாரம்… திமுக.,வை உதறித் தள்ளி ஒட்டு மொத்தமாக பாஜக.,வில் ஐக்கியம் ஆன வடுகபட்டி !

  70 குடும்பங்களை சார்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நிர்வாகிகள் உட்பட்ட பலர் விலகி பாரதிய ஜனதா கட்சியில்

  vadukapatti-bjp1
  vadukapatti-bjp1
  • திமுக.,வுக்கு அதிர்ச்சி கொடுத்த மொடக்குறிச்சி ஒன்றியம் வடுகப்பட்டி பேரூராட்சி!
  • ஓர் ஊரே பாஜக.,வில் இணைந்தது!

  5.8.2020 புதன் கிழமை அன்று மொடக்குறிச்சி ஒன்றியம் அரச்சலூர் அருகில் உள்ள வடுகபட்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டில் ஜேஜே நகரில் பாரதிய ஜனதா ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ஏற்பாட்டில் திமுக கிளை செயலாளர் தேவராஜ் தலைமையில் திமுகவில் உறுப்பினராக இருந்த 70 குடும்பங்களை சார்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நிர்வாகிகள் உட்பட்ட பலர் விலகி பாரதிய ஜனதா கட்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ் ஏ சிவசுப்பிரமணியன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்..

  vadukapatti-bjp
  vadukapatti-bjp

  முன்னதாக முருகரின் வேல் பூஜை செய்து ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் அனைவராலும் பாடப்பட்டது. நிகழ்ச்சியில் திமுகவில் இருந்து விலகிய தேவராஜ் பேசுகையில் முருகக் கடவுளின் கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற பெயரில் சிலர் இழிவு படுத்திய போது திமுகவின் தலைவர் ஸ்டாலின் அதைப் பற்றி எந்த கண்டனமும் தெரிவிக்காமல் தனது நிலைப்பாட்டின் மூலம் கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக உள்ளார்

  மேலும் அவரின் ஒவ்வொரு செயல்பாடும் இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது. அவரின் இந்த செயல்பாடு இந்து தர்மத்தைக் கடைப்பிடிக்கும் மக்களின் மனதை மிகவும் புண்படுத்துவதாக அமைந்தது

  vadukapatti-bjp2
  vadukapatti-bjp2

  அதனால் இதற்கு மேலும் திமுகவில் தொடரக்கூடாது என்று முடிவெடுத்து இந்து தர்மத்தைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு… அதற்கு தகுந்த இடம் பாரதிய ஜனதா மட்டுமே! அதனால் அனைவரும் பாரதிய ஜனதாவில் இணைகிறோம்… என்று அறிவித்தார்!

  இந்த இணைப்பு நிகழ்ச்சியில் மாநில ஓபிசி அணி செயலாளர் கலைச்செல்வன் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு பரமசிவம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, குரு குணசேகரன் மாவட்ட பொருளாளர் தீபக் ராஜா, மாவட்ட துணைத்தலைவர் பாலு அவர்கள் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் வேதாந்தம் மற்றும் மாவட்ட ஓபிசி அணி தலைவர் சிவசங்கர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட விவசாய அணி தலைவர் திரு சண்முகசுந்தரம் மாவட்ட ஆசிரியர் பிரிவு தலைவர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ரைஸ்மில் பாலு என்கிற பாலகிருஷ்ணன் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வகுமார் மற்றும் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் செங்கோட்டையன் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர்கள் குணசேகரன் கார்மேகம் பொருளாளர் தண்டபாணி மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில
  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சமூக. இடை வெளியுடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

  vadukapatti-bjp3
  vadukapatti-bjp3

  இந்த கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் அது சமயம் திமுகவிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று, மொடக்குறிச்சி தெற்கு தலைவர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »