Home சற்றுமுன் என்னை ரேப் பண்ணுவேன்னு பயமுறுத்தறான்: குஷ்பு வெளியிட்ட பகீர் புகார்!

என்னை ரேப் பண்ணுவேன்னு பயமுறுத்தறான்: குஷ்பு வெளியிட்ட பகீர் புகார்!

இப்போது மோடி ராமரைவிட பெரியவர் ஆகி விட்டார் போலும். கலியுகம் என்றால் இதுதான் போலும் என்று

kushboo
kushboo

என்னை கற்பழிப்பதாக பயமுறுத்துகிறான்… போட்டுடைத்த குஷ்பூ… முதலமைச்சருக்கு புகார் செய்த வைரல் டிவீட்.!

தன்னை ரேப் செய்வேன் என்று யாரோ ஒருவன் எச்சரித்துள்ளான் என்று கூறி அவனுடைய போன் நம்பர் விவரங்களை வெளியிட்டு பப்ளிக்காக கவுண்டர் கொடுத்துள்ளார் குஷ்பு.

இதுகுறித்து விஷயத்தை முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்று தனக்கே இது போன்ற சம்பவங்கள் நேர்ந்தால் சாதாரண பெண்களின் நிலைமை என்ன என்று வினா எழுப்பியுள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் டெக்னாலஜி சைபர் கிரைம்களுக்கு அதிக அளவு உதவி வருகிறது. சிலர் சைபர் ஆட்டக்காரர்கள் ஆன்லைன் ஏமாற்றுதல்களுக்கு முன்வந்துள்ள நிலையில் வேறு சிலர் ஃபேமஸ் செலிபிரிட்டிகளை டார்கெட் செய்து அச்சுறுத்தல்கள் விடும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து வருகின்றன.

kushboo-tweet
kushboo-tweet

புதிதாக சீனியர் நடிகை, காங்கிரஸ் தலைவர் குஷ்புவுக்கு இதுபோன்ற ஒரு பயமுறுத்தல் வந்துள்ளது. அதனால் உடனுக்குடன் சூடாக ரியாக்ட் ஆகியுள்ளார் குஷுபு. போலீசாருக்கு புகார் அளித்து முதலமைச்சருக்கும் செய்தி தெரிவித்துள்ளார். அந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

தன்னை ரேப் செய்வேன் என்று ஒருவன் பயமுறுத்தி உள்ளான் என்று குறிப்பிட்டு அவனுடைய போன் நம்பரும் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பூ. ட்ரூகாலர் மூலம் விவரங்களை சேகரித்து சஞ்சய் சர்மா என்ற பெயரில் ஒரு கால் வந்தது என்றும் அது கொல்கத்தாவில் இருந்து வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா போலீசார் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். அதோடு நிற்காமல் அந்த மனிதனின் விவரங்களை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ட்வீட் செய்து புகார் கூறியுள்ளார் குஷ்பு.

தீதி! எனக்கே இது போன்ற அச்சுறுத்தல்கள் வந்தது என்றால் பிற மகளிரின் நிலைமை என்ன என்று யோசித்துப் பாருங்கள் என்று முதலமைச்சரை வினா எழுப்பியுள்ளார் குஷ்பு.

இவ்வாறு எச்சரிக்கை விடுத்த அந்த மனிதனின் நம்பரை வெளிப்படுத்தி உள்ளதால் ஒரு நெட்டிசன் அது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு கூட உடனடியாக எதிர்விளைவு ஆற்றிய குஷ்பூ ஸ்டிராங் ரிஆக்சன் அளித்தார். இதுபோன்ற மனிதர்களின் மதிப்பை கூட பப்ளிக்காக வாங்க வேண்டும். அவனுக்கு கூட குடும்பம் இருக்கும் அல்லவா.. அதனால்தான் பகிரங்கமாக புத்தி கூற வேண்டும். அதற்காகத்தான் இவ்வாறு செய்கிறேன் என்று எரிந்து விழுந்துள்ளார்.

kushboo-tweet1
kushboo-tweet1

அதன்பின் மற்றுமொரு ட்வீட் செய்து பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்துள்ளார் குஷ்பு. அயோத்தியில் ராம ஜென்மபூமி பூஜை தொடர்பாக குழந்தை ராம் லல்லாவின் கையைப் பிடித்துக் கொண்டு கோவிலை நோக்கி நடப்பதாக பிரதமர் மோடியின் படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகியது. அதனை போஸ்ட் செய்து இப்போது மோடி ராமரைவிட பெரியவர் ஆகி விட்டார் போலும். கலியுகம் என்றால் இதுதான் போலும் என்று எகத்தாளமாக ட்வீட் செய்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »