26/09/2020 11:42 AM

விஜயவாடா கோவிட் தனிமைப்படுத்தும் சென்டரில் தீ விபத்து! 9 பேர் மரணம்!

விஜயவாடா ஏலூரு ரோடில் உள்ள ரமேஷ் மருத்துவமனை கோவிட் கேர் சென்டராக பயன்படுத்தும் ஹோட்டல் ஸ்வர்ணா பேலஸில் இந்த விபத்து நேர்ந்தது.

சற்றுமுன்...

பரிதாபம்! கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்!

பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.

எஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி!

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக...

சரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

பின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

வேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்
vijayawada-covid-centre
vijayawada-covid-centre
  • விஜயவாடா கோவிட் தனிமைப்படுத்தும் சென்டரில் தீ விபத்து.
  • 9 பேர் மரணம்.
  • பலரின் நிலைமை கவலைக்கிடம்
  • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்

ஒரு தனியார் மருத்துவமனை ஒரு ஹோட்டலை கோவிட் தாக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கென்றும் தனிமைப் படுத்துவதற்காகவும் பயன்படுத்தி வந்தது. பல ஹோட்டல்களை இவ்வாறு தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தி வருகின்றன . இந்த தீ விபத்து நடந்தபோது 30 பேர் நோயாளிகளும் 10 பேர் மருத்துவ சிப்பந்திகளும் இருந்தார்கள்.

விஜயவாடாவில் கோவிட் கேர் சென்டரில் ஞாயிறு இன்று விடியற்காலை மிகப் பெரும் தீ விபத்து நேர்ந்தது. விஜயவாடா ஏலூரு ரோடில் உள்ள ரமேஷ் மருத்துவமனை கோவிட் கேர் சென்டராக பயன்படுத்தும் ஹோட்டல் ஸ்வர்ணா பேலஸில் இந்த விபத்து நேர்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் தற்போது வரை மரணமடைந்து உள்ளார்கள். நிமிடத்திற்கு நிமிடம் மரணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பலரின் நிலைமை அபாயகரமாக உள்ளதாக சிபி ஶ்ரீனிவாசுலு தெரிவித்தார். அவர்களில் இருவர் நினைவிழந்து இருப்பதாக கூறினார்.

தீயணைப்பு படையினர் கடுமையாக உழைத்து ஜன்னல்களை உடைத்து ஏணிகள் மூலம் பலரை காப்பாற்றியுள்ளார்கள். இந்த ஹோட்டலில் முப்பது நோயாளிகளும் 10 மருத்துவ சிப்பந்திகளும் இருந்தார்கள்.

vijayawada-covid-centre1
vijayawada-covid-centre1

மிகவும் அடர்த்தியாக புகை படர்ந்ததால் அதிலிருந்தவர்கள் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார்கள். பாதிக்கப் பட்டவர்கள் ஜன்னலில் இருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அலறினார்கள்.

விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை லப்பீபேட்ட, மெட்ரோபாலிட்டன் ஹோட்டல் கோவிட் கேர் சென்டர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்கள். சுவர்ணா பேலசில் உதவி நடவடிக்கைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கிரவுண்ட் ப்ளோரிலும் முதல் மாடியிலும் தீ பரவியது. முதல் மாடியில் இருந்து நான்கு பேர் கீழே குதித்தார்கள்.

இன்று விடியற்காலை 4.45 – 5.00 மணி நேர சமயத்தில் இந்த தீ விபத்து நேர்ந்துள்ளதாக போலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மூச்சு விட முடியாமல் துடிதுடித்தனர். சுவர்ணா பேலசை ஹோட்டலை ரமேஷ் மருத்துவமனை கோவிட் கேர் மையமாக எடுத்து நடத்தி வந்தது.

தீக்கு அச்சப்பட்டு முதல் மாடியில் இருந்து நான்கு பேர் கீழே குதித்ததாக போலீஸார் தெரிவித்தார்கள். இவர்களில் கிருஷ்ணய்யா என்பவர் தீவிரமாக காயமடைந்துள்ளதாக சிபி கூறினார். இதுவரை 18 பேரை வேறு வேறு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறினார். உயிரிழந்தவர்களில் மூவர் கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளாக தெரிகிறது.

ஒரே ஒரு வெளியேறும் வழி இருந்ததால் ஏணி மூலம் பாதிக்கப்பட்டவர்களை கீழே இறங்கியதாக போலிஸார் தெரிவித்தனர்.

விவரம் அறிந்த உடன் பிரதமர் மோடி ஆந்திர முதல்வர் ஜெகனிடம் போன் செய்து விவரங்களைக் கேட்டறிந்தார். இறந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் உதவியை அறிவித்திருப்பதாக ஜெகன் பிரதமரிடம் கூறியதாக தெரிகிறது. காயமடைந்தவர்களுக்கு மேலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

செய்திகள்... மேலும் ...

Translate »