ஏப்ரல் 22, 2021, 7:45 மணி வியாழக்கிழமை
More

  8 வயதில் பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல்! 28 வயதில் ஆசிரியர்கள் மேல் வழக்கு!

  Screenshot_2020_0810_114257

  அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரிலிருக்கும் ஒரு பிரபலமான பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்னாள் படித்த ஒரு முன்னாள் மாணவர் பிலிபெர்ட்டி, அந்த பள்ளியின் மூன்று ஆசிரியர்களால் தான் சிறுவனாக இருந்த போது பாலியல் கொடுமை செய்யப்பட்டதால் 20 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் .

  இப்போது 28 வயதிலிருக்கும் அந்த மாணவர் பிலிபெர்ட்டி , திருமணமாகி ,இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி ஒரு வங்கியில் பணிபுரிகிறார் .இருந்தாலும் தான் அந்த எட்டு வயதில் பள்ளியில் ஆசிரியர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதில் மனஅழுத்தம் ,பயம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டதாகவும், தன்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கமுடியாமல் முடங்கிப்போனதாகவும் கூறி 20 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு தான் படித்த பள்ளி மீது வழக்கு தொடர்ந்துள்ளார் .

  அந்த மாணவரை வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் ,இப்போது 74 வயது ,60வயது மற்றும் 65 வயதாகி ரிட்டையர்டு ஆனாலும் , அந்த ஆசிரியர்களுக்கு மன்ஹாட்டன் கோர்ட் நோட்டிஸ் அனுப்பியுள்ளதில் ,கோர்ட்டில் ஆஜரான அவர்கள் 50000 டாலர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர் .இப்போது பில்பெர்ட்டி தன்னை போல பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் இது போல் அந்த பள்ளி மீது வழக்கு தொடுக்க சொல்லி கூறியுள்ளார் 

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »