Homeஇந்தியாபாசத்தோடு வளர்த்தேன் பாவி கையில் கொடுத்தேன்... வீடியோ பதிவிட்டு தந்தை தற்கொலை! விரக்தியில் இருமகள்களும்...

பாசத்தோடு வளர்த்தேன் பாவி கையில் கொடுத்தேன்… வீடியோ பதிவிட்டு தந்தை தற்கொலை! விரக்தியில் இருமகள்களும் ரயிலில் பாய்ந்த சோகம்!

Screenshot_2020_0810_124320

மகளை மருமகன் சித்ரவதை செய்ததால் மனமுடைந்த தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அதிர்ச்சியில், அவரது 2 மகள்களும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொதட்டூரை சேர்ந்தவர் பாபு, எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர். இவரது மகள்கள் ஸ்வேதா (26), சாயி (20). சில மாதங்களுக்கு முன் ஸ்வேதாவிற்கு திருமணம் ஆனது. சாயி இன்ஜினியரிங் படித்து வந்தார்.
இந்நிலையில், திருமணம் ஆன சில மாதங்களில் இருந்தே ஸ்வேதாவிற்கும், அவரது கணவர் சுரேஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது

சுரேஷ் குமார், தினமும் ஸ்வேதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

கணவரின் சித்ரவதையால் வேதனையடைந்த ஸ்வேதா, தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனால் பாபு, சுரேஷ் குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகும் கூட சித்ரவதை செய்து வந்துள்ளார்.

பாசத்தோடு வளர்த்த மகளின் நிலை கண்டு வேதனையடைந்த பாபு, நேற்று முன்தினம் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, சாயி ஆகிய இருவரும் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியாக சென்ற சரக்கு ரயி ல்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொதட்டூர் போலீசார், மற்றும் கடப்பா ரயில்வே போலீசார், சடலங்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிந்து ஸ்வேதாவின் கணவனான சுரேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் சித்ரவதை அனுபவிப்பதை தாங்க முடியாமல் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதும், தந்தை இறந்த அதிர்ச்சியில் அவரது 2 மகள்கள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபு தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். அதில், ‘எனது 2 மகள்களையும் நான் மிகவும் பாசத்துடன் வளர்த்தேன். முதல் மகளான ஸ்வேதாவை நன்கு படிக்க வைத்து என் வசதியை மீறி செலவு செய்து திருமணம் செய்து வைத்தேன்.

ஆனால், அவளின் கணவன் சுரேஷ் குமார் தினமும் சித்ரவதை செய்கிறான். இதையறிந்து நான் அவனிடம் கெஞ்சி கேட்ட போதும் திருந்தவில்லை. வேலைக்கு செல்லாத அவன் ஸ்வேதாவிற்கு கொடுத்த பணம், நகை எல்லாவற்றையும் விற்று மது குடித்து வீணாக செலவழித்துள்ளான். எனது தற்கொலைக்கு அவன்தான் காரணம். அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,360FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பிரேவ்’க்கு பின்னர்25 வருடங்களுக்கு கழித்து படம் இயக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ..

ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 'தி பிரேவ்'க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும்...

ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளபொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம்...

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

Latest News : Read Now...